tamilnadu

img

‘விஸ்க்’கை பயன்படுத்தும் பாதுகாப்புத்துறை

திருவனந்தபுரம்:
கேரளத்தின் மற்றொரு சுகாதார முன்மாதிரியை நாட்டின் பாதுகாப்புத்துறை பின்பற்றுகிறது. கோவிட் பரிசோதனையை மேலும் எளிதாக்க எர்ணாகுளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் உருவாக்கிய விஸ்க்கை இந்திய பாதுகாப்புத்துறை பயன்படுத்த துவங்கியுள்ளது.மருத்துவக் கல்லூரியின் உதவியுடன் ‘எக்கனோ விஸ்க்’ என்கிற பெயரில் தயாரிக்கப்பட்ட இந்த கருவி கேரள சுகாதாரத்துறையின் முன்மாதிரியாகும். இக்கருவி ஏற்கனவே தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் இதை மாதிரியாக கொண்டு விஸ்க் தயாரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இரண்டு நிமிடத்திற்குள் பாதுகாப்பாக சளி மாதிரியை சேகரிக்க இந்த விஸ்க் உதவி வருகிறது.  

கேரள சுகாதாரத்துறைக்கும் மருத்துவ கல்வித்துறைக்கும் இது ஒரு பெருமைக்குரிய நிகழ்வு என சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா கூறினார். விஸ்க் உருவாக்கத்துக்கு தலைமை வகித்த எர்ணாகுளம் மருத்துவக் கல்லூரி ஆர்எம்ஓ டாக்டர் கணேஷ்மோகன் உள்ளிட்ட குழுவினருக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.