கேரள முதல்வர் வாழ்த்து
திருவனந்தபுரம், ஜுலை 7- சமுதாயத்தின் நன்மைக்காக தன்னை அர்ப்பணித்த கே.ஆர்.கவுரியம்மாவின் வாழ்க்கை கேரளாவில் முற்போக்கான அரசிய லுக்கு எப்போதும் உத்வேகம் அளிப்ப தாக முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கே.ஆர்.கவுரியம்மா வின் 102 ஆவது பிறந்தநாளில் வாழ்த்து தெரிவித்து பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில் மேலும் கூறியிருப்ப தாவது: தோழர் கே.ஆர். கவுரியம்மா இல்லாமல் கேரளாவின் அரசியல் வரலாற்றை எழுத முடியாது. கேரளாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சிக்கும் அது வழிநடத்திய சமூகப் புரட்சிக்கும் அவர் முக்கிய பங்கு வகித்தார். நிர்வாகத் துறையிலும் கேரளாவின் வளர்ச்சிக்கு கவுரியம்மா பல பங்களிப்புகளைச் செய்துள்ளார். தோழ ருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.