tamilnadu

புனலூரில் பாஜகவில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கட்சியில் 150 பேர் இணைந்தனர்

புனலூர், ஜுன் 15-  ஆரியங்காவு பஞ்சாயத்தில் 150 பாஜக ஆர்எஸ்எஸ் ஊழியர்கள் அந்த அமைப்புகளில் இருந்து விலகி சிபிஎம் உடன் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ளனர்.  பாஜகவின் ஆரியங்காவு பஞ்சாயத்து தலைவர், பிஎம்எஸ் வட்டார தலைவர் பொறுப்புகளை வகித்த உத்தமன், யுவமோர்ச்சா மண்டல தலைவர் வினீஷ் ஆகி யோரது தலைமையில் 150 யுவமோர்ச்சா, பாஜக ஊழி யர்கள் சிபிஎம்மில் இணைய முன்வந்துள்ளனர். கழுதுருட்டி  உள்ளூர் கமிட்டி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.ஜெயமோகன் செந்துண்டு கள் அணிவித்து அவர்களை வரவேற்றார்.    இடுக்கியில் 37 பேர் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டத்தில் காங்கிரஸ் பாஜகவில் இருந்து விலகிய 37 பேர் சிபிஎம்மில் இணைந்து செயல்பட முன்வந்துள்ளனர். நெடுங்கண்டம் பஞ்சாயத்து 12  ஆம் வார்டு முண்டியெருமை கல்லும்மேக்கல் பகுதியை சேர்ந்தவர்கள் இவர்கள்.  தோணிப்பாறையில் ஜோசப் தாமஸ், ரோசம்மா தாமஸ், கருணாகரன் உள்ளிட்ட 37 பேர் உட்பட பலர் பங்கேற்ற கூட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.என்.விஜயன், நெடுங்கண்டம் வட்டார செயலாளர் டி.எம். ஜாண், உள்ளூர் செயலாளர் பி.கே.தங்கப்பன் உள்ளிட்டோர் வரவேற்று பேசினர்.