tamilnadu

img

பெல் - இஎம்எல் பங்கு விற்பனை... கேரள அரசு வாங்க முடிவு

திருவனந்தபுரம்:
பெல் – இஎம்எல் கூட்டு நிறுவனத்தின் பங்குகளை வாங்க கேரள அரசு ஒப்புதல்அளித்துள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.மத்திய பொதுத்துறையின் பாரத் மிகுமின் நிறுவனம் (பிஎச்இஎல்) மற்றும்கேரள அரசின் மின் பொருள் உற்பத்தி நிறுவனம் (இஎம்எல்) கூட்டாக பெல் – இஎம்எல் ஆலையை நடத்தி வருகின்றன. 2010இல் பெல் நிறுவனத்தின் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்தது. அப்போது பெல்லின் 49 சதவிகித பங்குகளை இஎம்எல் வாங்கியது. அதன்படி 2010 செப்டம்பர் முதல் பெல்-இஎம்எல் என்கிற கூட்டு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.தற்போது மத்திய அரசு கூட்டு நிறுவனத்திலிருந்து விலகவும் பெல் நிறுவனத்திடம் உள்ள 51 சதவிகித பங்குளை விற்கவும் முடிவு செய்துள்ளது. இந்த பின்னணியில் பெல் நிறுவனபங்குளை வாங்க கேரள அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.