tamilnadu

img

இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படுவோருக்கு 7 மாவட்டங்களில் 14 சிறப்பு நிவாரண மையங்கள்

திருவனந்தபுரம், மார்ச் 2-  இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப் பட்டவர்களை தங்க வைப்பதற்காக கேர ளத்தில் 7 மாவட்டங்களில் சிறப்பு நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ரூ.90 கோடி செலவில் சராசரியாக 1000 பேர் வசிக்கும் 14 மையங்களை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் நிர்மாணித்து வருவதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். இவற்றில் மூன்று ஜூன் மாதத்திற்கு முன்பு செயல்படும். இந்த மையங்கள் பேரிடர் காலங்களில் பள்ளிகள் மற்றும் பிற முகாம்களை அமைப்பதில் உள்ள சிரமங்களையும் தாமதங்களையும் தவிர்க்க உதவும் என்றார். 3 மாடிகள் கொண்ட மையத்தில் பெண்கள், ஆண்கள் மற்றும் மாற்றுத்திற னாளிகள் தங்குவதற்கான வசதி உள்ளது. பொது சமையலறை ஜெனரேட்டர் போன்றவை இருக்கும். அரசு நிலத்தில் உள்ள இந்த மையங்களை உட்புற விளையாட்டு பயிற்சி மையம், பெண்கள் உடற்பயிற்சி கூடம் மற்றும் ஒரு கூட்ட அரங்காக பயன்படுத்தலாம். பேரழிவு ஏற்பட்டால் உடனடியாக நிவாரணம் பெறக்கூடிய நடவடிக்கைகளுக்கு மட்டுமே அவை பயன்படுத்தப்படும். இந்த மையங்கள் மூலம், உள்ளாட்சி அமைப்புகள் அந்தந்த பகுதிகளில் உள்ள உள்ளூர் மக்களுக்கு பயிற்சி அளித்து, நான்கு வகையான அவசரகால நடவடிக்கை குழுக்களை அமைத்துள்ளனர். தங்குமிடம் மேலாண்மை, தேடல் மற்றும் மீட்பு, முதலுதவி மற்றும் எச்சரிக்கை ஆகியவற்றின் அடிப்படை யில் 4 அணிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகி றது. தேசிய பேரிடர் மீ்ட்பு படையும், தீய ணைப்பு பாதுகாப்பு துறையும் தேவையான பயிற்சி அளித்து வருவதாக முதல்வர் தெரிவித்தார்.