tamilnadu

img

சாதி-மத பாகுபாடுகளுக்கு எதிராகவும் குரலெழுப்ப நடிகையர் கூட்டமைப்புக்கு பா.ரஞ்சித் வேண்டுகோள்

கொச்சி, ஏப்.27-டபிள்யுசிசி என்கிற நடிகையர் கூட்டமைப்பு கேரள மாநிலத்தோடு மட்டும் ஒதுங்கி நிற்காமல் இந்தியாவின் மற்ற சினிமா வட்டாரங்களிலும் விரிவு படுத்தப்பட வேண்டும். பாலியல் பாகுபாடுக்கு எதிராக மட்டுமல்லாது சாதி-மத பாகுபாடுகளுக்கு எதிராகவும் குரல் எழுப்ப வேண்டும் என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் வேண்டுகோள் விடுத்தார்.கொச்சியில் டபிள்யுசிசியின் (றுடிஅநn in ஊiநேஅய ஊடிடடநஉவiஎந) இரண்டாம் ஆண்டு மாநாடு வெள்ளியன்று நடந்தது. கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா மாநாட்டை துவக்கி வைத்தார். உச்சநீதிமன்ற வழக்கறிஞர் விருந்தா கோவர், திரை கலைஞர்கள் ஸ்வாரா பாஸ்கர் (இந்தி), மஞ்சு வாரியார், பார்வதி, பீனுபால், அஞ்சலி மேனன், ரேவதி, ரிமாகல்லிங்கல், ரம்யா நம்பீசன், சமூக செயற்பாட்டாளர் கே.அஜிதா, ஆஸ்கார் விருதுபெற்ற தயாரிப்பாளர் குனீர் மோங்கன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்விழாவில் மேலும் பேசியதாவது: தாக்குதலுக்குள்ளான தலித் சமூகத்தைச் சேர்ந்த முதல் சினிமா நடிகை பி.கே.ரோசியின் காலத்தில் டபிள்யுசிசி இருந்திருந்தால் அவர் நாடுவிட்டு ஓடவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. இன்று பிரச்சனைகளை வெளிப்படையாக பேசத்தக்க ஓர் இடமாக டபிள்யுசிசி உருவாகியுள்ளது. இரையாக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்கும் போக்கில் டபிள்யுசிசி மாற்றம் ஏற்படுத்தியுள்ளது. டபிள்யுசிசி ஒரு கூட்டமைப்புஎன்பதைக் கடந்து ஒரு தொழிற்சங்கமாக மாறியுள்ளது. இந்தியாவில் அதிக பணம் முதலீடு செய்யப்படும் சினிமா உலகமான பாலிவுட்டிலும், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இதர பகுதிகளுக்கும் இந்த அமைப்பு பரவ வேண்டும் என கூறினார்.