tamilnadu

கேரளத்தில் புதிதாக 195 கோவிட் நோயாளிகள் வெளியில் இருந்து வந்தோர் 180; குணமடைந்தது 102பேர்

திருவனந்தபுரம், ஜுன் 28- கேரளத்தில் சனியன்று புதிதாக 195 பேருக்கு கோவிட் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 118பேர் வெளிநாடு களில் இருந்தும் 62 பேர் இதர மாநிலங்களில் இருந்தும் கேரளத்துக்கு வந்தவர்கள். தொடர்புகள் மூலம் 15 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் மலப்புறம் மாவட்டத்தில் 10 பேர், கொல்லம் 2, எர்ணா குளம், திரிச்சூர், கண்ணூர் மாவட்டங்களில் தலா ஒருவருக்கு தொடர்புத் தொற்று ஏற் பட்டுள்ளது. சிகிச்சையில் இருந்த 102 பேர் சனியன்று குணமடைந்தனர். பல்வேறு மாவட்டங்க ளில் 1,67,978 பேர் கண்காணிப்பில் உள்ள னர். இவர்களில் 1,65,515 பேர் வீடுகள்/ நிறு வன கண்காணிப்பிலும், 2463 பேர் மருத்துவ மனைகளிலும் உள்ளனர். சனியன்று 281 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக் கப்பட்டனர்.  பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள் ளன. சனியன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 6166 மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுவரை வழக்கமான மாதிரி, பெரிதாக்கப்பட்ட மாதிரி, சென்டினல் மாதிரி, சி.பி. நாட் மற்றும் ட்ரூ நாட் உட்பட மொத்தம் 2,15,243 மாதிரி கள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.அதில் 4032 மாதிரிகளின் முடிவுகள் நிலுவை யில் உள்ளன. மேலும், சமூக தொடர்பு அதி கம் உள்ள சுகாதார ஊழியர்கள், வெளி மாநில தொழிலாளர்கள், சமூக தொடர்பு அதி கம் உள்ள நபர்கள் போன்ற முன்னுரிமை பிரிவினிரின் 44,129 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 42,411 மாதிரிகள் நோய் தொற்று இல்லை என உறுதியாகின. சனியன்று மேலும் ஒரு தீவிர நோய் பரவல் பகுதி (ஹாட் ஸ்பாட்) அறிவிக்கப் பட்டது. ஏற்கனவே தீவிர நோய் பரவல் பட்டியலில் இருந்த 4 பகுதிகள் விலக்கப் பட்டன. தற்போது கேரளம் முழுவதும் 111 ஹாட் ஸ்பாட்டுகள் உள்ளன.