tamilnadu

img

கேரளத்தில் 10, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் பலத்த பாதுகாப்பு முன் எச்சரிக்கையுடன் தொடக்கம்

திருவனந்தபுரம், மே 26- கேரளத்தில் கோ விட் தடுப்பு முன்னெச்சரிக் கைகளை பின்பற்றி பலத்த பாதுகாப்புடன் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் செவ்வாயன்று தொடங்கின. கோவிட் பீதியைத் தொ டர்ந்து நாடு முழுவ தும் ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டதைத் தொடர்ந்து எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ்  2 தேர்வுகள் ஒத்தி வைக்கப் பட்டன. இரண்டு மாதகால இடைவெளிக்குப் பிறகு மே  26 முதல் 30 வரை இந்த தேர்வு கள் நடைபெற உள்ளன. மாநி லம் முழுவதும் எஸ்எஸ்எல்சி  மற்றும் பிளஸ் 2 இரண்டு பிரி வுகளிலும் மொத்தம் 13.5 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். முத நாள் காலை 9.45க்கு பிளஸ் 2 கணித தேர்வும், மதியம் 1.45 க்கு எஸ்எஸ்எல்சி கணித தேர்வும் நடைபெற்றன. தேர்வுக்கு முன்பும், பின்பும் அனைத்து தேர்வு மையங்களும் கிருமி நாசினி  தெளித்து சுத்தம் செய்யப்பட் டன. காலை முதல் வரத் தொ டங்கிய மாணவர்களுக்கு உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டது. ஒரு  வகுப்பறைக்குள் 20 மாண வர்கள் மட்டுமே தேர்வு எழுத  அனுமதிக்கப்பட்டனர். அனை வரும் முக கவசம் அணிந்து  தனி மனித இடைவெளியை பின்பற்றி தேர்வு எழுதி னர். பேனா, பென்சில் போன்ற வற்றை பரிமாறிக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. மாணவர்களுடன் வந்த  பெற்றோர் பள்ளி வளாகத்து க்குள் அனுமதிக்கப்பட வில்லை. தேர்வு எழுத வந்து செல்லும் மாணவர்களை தடுக்க கூடாது என காவ ல்துறை தலைவர் லோக்நாத் பெஹ்ரா உத்தரவிட்டுள்ளார். வெளி மாநிலங்களில் இருந்தும், வீட்டு கண்கா ணிப்பில் நபர்கள் உள்ள வீடுகளில் இருந்தும், தனி மைப்படுத்தப்பட்ட பகுதிக ளில் இருந்து  வருவோ ருக்கும் தனியாக தேர்வு எழு தும் இடம் தயார் செய்யப்பட் டிருந்தது. முக கவசமும், சுகாதார குறிப்புகளும் அனைத்து மாணவர்களிள் வீடுகளிலும் முன்னதாகவே வழங்கப்பட்டன. தேர்வுத் தாள் மதிப்பீடு செய்யும்பணி ஏழு நாட்களுக்குப் பிறகு தொ டங்க உள்ளன.