கரூர், நவ.6- தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் கரூர் மாவட்ட குழு சார்பில் 27 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட அளவிலான மாநாடு கரூர் ஜெயராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஜெயராம் கல்லூரியின் தலை வர் ராமசாமி தலைமை வகித்தார். அறிவியல் இயக்க மாவட்டத் தலை வர் உ.சங்கர் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் ஐ.ஜான்பாஷா முன்னிலை வகித்தார். கரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலு வலர் சி.முத்துகிருஷ்ணன், தமிழ் நாடு அறிவியல் இயக்க மாநில நிர் வாகி பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட நிர்வாகிகள், ரோட்டரி சங்க தலை வர் ஸ்ரீதர் ஆகியோர் பேசினர். மாவட்ட கல்வி அலுவலர் சிவராமன் சான்றிதழ் வழங்கினார். அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் தங்களுடைய பகுதிகளில் உள்ள பிரச்சனைகளை கள ஆய்வு செய்து, அதற்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் ஓர் வழிகாட்டி ஆசிரியருடன் ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தனர். அந்த ஆய்வுகளை கல்லூரி பேராசிரியர்கள் மதிப்பீடு செய்து மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படுகின்றனர். கரூர் மாவட் டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளி கள் மேல்நிலை, உயர்நிலை, நடு நிலைப்பள்ளிகளில் இருந்து 900 மாணவர்கள், வழிகாட்டி ஆசிரி யர்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். மொத்தம் 450 ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதில் 23 ஆய்வுகள் தேர்வு செய்யப்பட்டன. இதில் தேர்வு செய்யப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் நவம்பர் 15 ஆம் தேதி வேலூரில் நடைபெறவுள்ள மாநில மாநாட்டில் பங்கேற்க உள்ளன. கலந்துகொண்ட மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங் கப்பட்டது. மாவட்ட நிர்வாகி பொன் ஜெயராம் நன்றி கூறினார்.