tamilnadu

img

வேட்பாளர் தேர்வில் அதிருப்தி பாஜக மீது எடியூரப்பா கடுப்பு; பிரச்சாரத்தை புறக்கணித்தார்

பெங்களூரு, ஏப்.4- பாஜக அகில இந்திய தலைமைமீதான அதிருப்தியால், கர்நாடக மாநிலபாஜக தலைவர் எடியூரப்பா, தேர்தல்பிரச்சாரத்தை புறக்கணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகத்தில் எடியூரப்பாவை நம்பியே பாஜக உள்ளது. ஆனால்,வேட்பாளர் தேர்வில் எடியூரப்பாவின் பரிந்துரைகளை அக்கட்சி அலட்சியம்செய்து விட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, பெங்களூரு தெற்கு மக்களவைத்தொகுதியில், தேஜஸ்வி சூர்யா என்ற இளைஞர் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டது எடியூரப்பாவுக்கு பிடிக்கவில்லை. மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமாரின் மனைவி தேஜஸ்வினிக்குத் தான், பெங்களூரு தெற்குத் தொகுதியில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றுஎடியூரப்பா கூறியிருக்கிறார். பாஜகதலைமை கடைசி வரை அதை ஏற்காமல், தேஜஸ்வி சூர்யாவை நிறுத்தியிருக்கிறது. இதில் விரக்தியடைந்த எடியூரப்பா, தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லாமல் தவிர்த்து வருவதாகவும், அவர் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டிய தாவண்கரே கூட்டத்தில் கூடகலந்து கொள்ளவில்லை என்றும் செய்திகள் கூறுகின்றன.இது கர்நாடக பாஜகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரு தெற்குத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் தேஜஸ்வி சூர்யா (28) மீதுஇளம்பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கிளப்பியது ஏற்கெனவே நினைவிருக்கலாம். இந்த விஷயம் தேசிய ஊடகங்களில் விவாதமான நிலையில், தன்னைப் பற்றி அவதூறு பரப்பப்படுவதாக தேஜஸ்வி நீதிமன்றத்திற்கு ஓடி இடைக்காலத் தடைபெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.