tamilnadu

நிவாரணம் வழங்க கோரி  ஆட்சியரிடம்  விதொச மனு

நாகர்கோவில்: கொரோனா வைரஸ்தொற்றை காரணம் காட்டி ஊரக வேலைத் திட்டத்தில் 55 வயதுக்கு மேலான தொழிலாளர்களுக்கு வேலை மறுக்கப்பட்டு வரும் நிலையில் வாழ்வாதாரம் இன்றி திண்டாடிவரும் அவர்க ளுக்கு வேலைக்கான ஊதியத்தை நிவாரணமாக வழங்கிட வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரேவிடம் மனு அளிக்கப்பட்டது. அதன் விபரம் வருமாறு, கன்னியாகுமரி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தின்கீழ் 100 நாள் வேலை நடைபெற்று வருகிறது. இதில் கடந்த பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் தொற்றை காரணம் காட்டி 55 வய துக்கு மேலான தொழிலாளர்களுக்கு வேலை மறுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு ஒன்றியங்களில் வேலை இருந்தும் ஊதியத்திற் கான நிதி ஆதாரங்கள் இருந்தும் பல ஊராட்சிகளில் வேலை வழங்காமல் புறக்கணிக்கப்படும் நிலை உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலையிட்டு பார பட்சமின்றி அனைவருக்கும் வேலை வழங்கிட வேண்டும் என கூறப்பட்டுள் ளது. இந்த மனுவை, மாவட்டத்தலைவர் என்.எஸ்.கண்ணன், மாவட்ட செயலா ளர் மலைவிளைபாசி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் குமரேசன், திருச்சிற்றம் பலம், லெட்சுமி உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.