நாகர்கோவில், ஜுலை 18- கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோ னா தொற்று வேகமாக பரவி வருகிறது. அத்துடன் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் 5 பேருக்கு மேல் ஒரு இடத்தில் கூட அனுமதி இல்லை என குமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிர சாந்த் மு.வடநேரே அளித்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: ஆடி அமாவா சையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பலி தர்பண நிகழ்ச்சிக்கு இந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதியில்லை . எனவே மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. நோய்த்தொற்று அறிகுறிகள் உள்ளவர்களை கவனிப்ப தற்காகவும், கொரோனா பரவலை கட்டுப் படுத்துவதற்காகவும் கோவிட் கவனிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு மருத்துவர் கண்காணிப்பில் கபசுர குடிநீர் உள்ளிட்ட மருந்துகள் அனுமதிக்கப்படும் நபர்களுக்கு வழங்கப்படுகின்றன. அத்து டன் நல்ல தரமான மற்றும் சத்தான உணவு களும் மருத்துவர்கள் மேற்பார்வையில் வழங்கப்படுகின்றன.
ஈரானில் இருந்து 24 மீனவர்கள் கன்னி யாகுமரி மாவட்டத்திற்கு வந்துள்ளனர். இவர்கள் அழகப்பப்புரத்திலுள்ள அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் 7 நாட்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப் பட்டுள்ளனர். பயன்படுத்தப்பட்ட முககவ சங்கள் மூலம் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மருத்துமனைகளில் பயன் படுத்தப்பட்ட முககவசங்கள், சுய பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவற்றை ஏற்கனவே மருத்துவ கழிவு மேலாண்மையின் படி ஒப்பந்தம் செய்த நிறுவனத்தின் மூலம் பாதுகாப்பாக அகற்றப்பட வேண்டும். சமுதாய நிலையில் வீடுகள் மற்றும் கடைகள் அலுவலகங்களில் பயன்படுத்தப் படும் முககவசம் போன்றவற்றை எரிப்பதன் மூலமோ அல்லது ஆழமாக புதைப்பதன் மூலமோ பாதுகாப்பாக அகற்றப்பட வேண்டும். வீடுகளில் வைத்து பயன்படுத் தப்பட்ட முககவசம் போன்றவற்றை ப்ளீச்சிங் பவுடர் கலந்த நீரில் அல்லது சோடியம் ஹைப்போ குளோரைடு கரைசல் மூலம் கிருமி நாசம் செய்த பிறகு எரிப்பதன் மூல மாகவோ அல்லது ஆழமாக புதைப்பதன் மூலமாகவோ பாதுகாப்பாக அகற்ற வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரி பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையிலும், களபணியாளர்கள் மூலமா கவும், சோதனைச்சாவடிகள் மூலமாகவும் 65829 நபர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கோவிட் கவனிப்பு மையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வெள்ளிக் கிழமை வரை 1181 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா நோய்த்தோற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை மொத்தம் 872 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப் பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மொத்தம் 4988 நபர்கள் வீட்டு தனிமைப் படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வெளியூரிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத் திற்கு வந்த பயணிகளில் 4918 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் என அதில் கூறப்பட்டுள்ளது.