நாகர்கோவில், மே.27- விவசாயத்திற்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார சட்டம் 2020 ஐ வாபஸ் பெற வேண்டும், அனைத்து விவ சாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், சிறு குறு விவசாயிகளுக்கு மாதம் 10,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், அனைத்து ஏழைகளுக்கும் மாதம் 7,500 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி குமரி மாவட் டத்தில் பல இடங்களில் விவசாயிகள் சங்கம் சார்பில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பார்வதிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட துணைத்த லைவர் என்.முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகி ஆறுமுகம் பிள்ளை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆர்.செல்ல சுவாமி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்டோ ஓட்டு நர்கள் சங்க தலைவர் மரிய ஸ்டீபன் ஆகி யோர் கலந்து கொண்டனர். திருவட்டாரில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, வட்டார தலைவர் மணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலா ளர் ஆர்.ரவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலாளர் வில்சன் ஆகி யோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், ஈத்தாமொழி, குழித்துறை, காஞ் சாம்புறம், பரசேரி, கழுவன்திட்டை, சுவாமியார்மடம், கொல்வேல் உட்பட 50 க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு ஆதரவாக விவசாயிகளின் நியாயமான கோரிக் கைகளை நிறைவேற்றிட மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஆதரவு ஆர்ப்பாட்டம் நாகர்கோ வில் சிஐடியு மாவட்ட அலுவலகம் முன்பாக நடைபெற்றது. இதில் சிஐ டியு மாவட்ட செயலாளர் கே.தங்க மோக னன், மீன் சம்மேளன மாநில பொதுச் செயலாளர் அந்தோணி, சிஐடியு மாவட்ட பொருளாளர் சித்ரா தையல் சங்க மாவட்ட செயலாளர் சந்திரகலா, பொருளாளர் பொன்னம்மாள், மில் சங்க பொதுச்செயலாளர் மாணிக்கவாச கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.