நாகர்கோவில், ஆக.24- மக்கள் விரோத, தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் மத்திய மாநில அரசு களை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் முழு வதும் வீடு வீடாக நோட்டீஸ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. திங்களன்று நாகர் கோவில் மாநகர குழு சார்பில் நாகர்கோவில் வெட்டுர்ணிமடம் பகுதியில் மக்கள் சந்திப்பு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.தங்கமோகனன், மாவட்ட க்குழு உறுப்பினர் எஸ்.அந் தோணி, மாணிக்கவாசகம், மனோகர்ஜஸ்டஸ், அந்தோணி பால், ஜோசப் உட்பட பலர் கலந்து கொண்டனர். குலசேகரம் வட்டார குழு சார்பில் குலசேகரம், திற்பரப்பு, கொச்சூட்டு பாறை உட்பட பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. வட்டார செயலாளர் விஸ்வம்பரன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.சி.ஸ்டா லின் தாஸ், வட்டார குழு உறுப்பி னர் ஸ்ரீகுமார் கலந்து கொண்ட னர். கன்னியாகுமரி மாவட்டம் கோ வளம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்க நோட்டீஸ் விநியோகம் நடைபெற்றது.