tamilnadu

img

காஞ்சிபுரத்தில் கடைகள் திறக்கும் நேரம் என்ன?

காஞ்சிபுரம், ஜூன் 18- காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலை 6 மணி  முதல் மாலை 4 மணி வரை கடைகள் செயல்படவும், உணவகங்கள் இரவு 8 மணி  வரை பார்சல் வழங்கவும் அனுமதிக்கப் பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பா. பொன்னையா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாங்காடு, குன்றத்தூர் பகுதி யில் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் அமைக் கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி வழங்கப்படும், 2 ஆம்பு லன்ஸ்களுடன் 10 பேர் கொண்ட மருத்துவ குழு அங்கு பணியாற்ற உள்ளது என்றார். தொழிற்சாலை வளாகம் அல்லது அருகில்  தங்கி தொழிலாளர்கள் பணிக்கு வரலாம்.  கட்டுப்பாட்டு மண்டலங்களில் இருப்பவர்கள்,  தொழிற்சாலைகளில் பணிபுரிய தடை விதிக்  கப்பட்டுள்ளது. தொழிற்சாலையில் பணியாற்  றும் உயர் அதிகாரிகளுக்கு மட்டும் சென்னை யில் இருந்து காஞ்சிபுரம் நுழைவு அனுமதி  வழங்கப்பட்டுள்ளது எனவும் தெளிவு படுத்தினார். மார்க்கெட் பகுதியில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. வார்டுகளில் உள்ள சிறு  வியாபாரிகளிடம் காய்கறிகள் மற்றும் அத்தி யாவசிய பொருட்களை மக்கள் வாங்கிக் கொள்ள வேண்டும், சிறு வியாபாரிகளுக்கு அடையாள அட்டை அளிக்கப்பட்டுள்ளது. அதனைகாட்டி வாரத்திற்கு இருமுறை சென்று பொருட்களை பெற்றுக் கொள்ள லாம் என்றும் அவர் கூறினார்.