tamilnadu

மக்கள் விரோத கொள்கைகளை முறியடிக்க உழைப்பாளி மக்களை அணிதிரட்டுவோம் சிஐடியு மாநில மாநாடு அறைகூவல்

காஞ்சிபுரம், செப். 19- மக்கள்விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளை முறியடிக்க உழைப்பாளி மக்களை அணிதிரட்டுவோம் என்று சிஐடியு மாநில மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது. காஞ்சிபுரத்தில் வியாழனன்று (செப். 19) தொடங்கிய 14வது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:  இந்திய தேச நலனுக்கு எதிரான அரசாக மத்திய அரசு அமைந்துள்ளது. விவசாயத்தின் வீழ்ச்சி ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை பின் னுக்குத் தள்ளியுள்ளது. உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு என தொடர் நடவடிக்கைகளினால் அனைத்து தொழில் களும் நெருக்கடியினை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து வருகின்றனர். மறுபுறம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை பெருகிவருகிறது. மக்களின் வாழ்க்கைத்தரம் சரிந்து வாங்கும் திறன் வீழ்ச்சியடைந்துள்ளது. மக்கள் நலன் சார்ந்த பொருளாதார செலவுகளை மேற்கொள் வதற்கு மாறாக, கார்ப்பரேட் நிறுவனங்களுக் கும், பெரு முதலாளிகளுக்கும் கடன் தள்ளுபடி, வரி குறைப்பு என்ற பெயரில் பலலட்சம் கோடி களை சலுகைகளாக வாரி இறைத்துவருகிறது.  மக்களின் கண்ணில் மண்ணைத் தூவும் வகையில் போலியான புள்ளி விவரங்கள் பிம்ப மாக காட்டப்படுகிறது. இந்தித் திணிப்பு, புதிய கல்விக் கொள்கை, ஹைட்ரோ கார்பன் திட்டம், எட்டு வழிச்சாலை போன்ற அடுக்கடுக்கான மக் கள் விரோத நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற அடக்குமுறை சர்வாதிகாரத்  திற்கு அச்சாரம் அமைத்து வருகிறது. முதற்படி யாக தேசிய புலனாய்வு முகமை திருத்தச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்திருத்தம் (UAPA) ஆகிய சட்டங்கள் அவசர கதியில் எவ்வித விவாதமுமின்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக தகவல் அறியும் உரிமைச் சட்டம், மோட்டார் வாகன சட்டம், தொழிலாளர் நலச் சட்டம் போன்றவற்றில் திருத்தங்கள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. ஒரேநாடு, ஒரே ரேஷன் என உணவு பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் மாநில அரசிற்கான உரிமையினை பறிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக உடைத்து, 370வது பிரிவையும் ரத்து செய்து மாநில அந்தஸ்தையும் பறித்துள்ளனர். இது கூட்டாட்சி முறைக்கு எதிரான நடவடிக்கை யாகும். மதத் துவேஷத்திற்கும் இதைப் பயன் படுத்துகின்றனர். சிறுபான்மையினருக்கு எதி ரான தாக்குதல், தலித்துக்களுக்கு எதிரான தாக்கு தல், பெண்களுக்கு எதிரான பாலினபாரபட்சம், சாதிய மோதல்களை கருவியாக்குதல் என திசைதிருப்பும் பணிகளை திட்டமிட்டு நிறை வேற்றி வருகிறது.  மத்திய அரசு தனது நிதிநிலை அறிக்கையில் ரூ. 1.05 லட்சம் கோடிக்கு பொதுத்துறை பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கியில் இருந்து 1 லட்சத்து 76 ஆயிரம் கோடியை எடுத்துவிட்டனர். ரயில்வே, பாது காப்பு தளவாட உற்பத்தி உள்ளிட்டவைகளை பிரித்து தனியாரிடம் ஒப்படைக்க உள்ளனர். தொழிற்சங்க உரிமை, தொழிற்சங்க அங்கீ காரச் சட்டம், கூட்டுப்பேர உரிமை என அனைத்தையும் மறுக்கும் அரசாக மோடி அரசு உள்ளது. போராடிப் பெற்ற உரிமைகளை மறுக்கும் மக்கள் விரோத கொள்கைகளை அமலாக்கும் மத்திய அரசுக்கு எதிராக உழைப் பாளி மக்களை அணிதிரட்டவும், சக்திமிக்க போராட்டங்களை நடத்திட வேண்டுமெனவும் சிஐடியு 14வது மாநில மாநாடு அறைகூவல் விடுக்கிறது. இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப் பட்டுள்ளது.