tamilnadu

img

தேக்வாண்டோ போட்டியில் பதக்கங்களை குவித்த தமிழ்நாட்டு வீரர்கள்

காஞ்சிபுரம், டிச.31- தேசிய தேக்வாண்டோ போட்டி டிசம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் பெங்களூர் மல்லேஸ் வரம் குண்டோரா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா, மேற்கு வங்காளம், பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட அகாடமிகளைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர்.  இதில் ஸ்மார்ட் கேம் அகடமியைச் சேர்ந்த சென்னை மற்றும் காஞ்சிபுரம் வீரர்கள் 52  பேர் பங்கேற்றனர். டேக்வாண்டோ பயிற்சியாளர்கள் டி. செந்தாமரைக்கண்ணன், டி. யுவராணி, சி. பிரகாஷ், ஆர். வாசுதேவன் தலைமையில் கலந்து கொண்ட வீரர்கள்  30 தங்கம், 20 வெள்ளி, 17 வெண்கலம் வென்று, 2ஆவது இடத்தைப் பிடித்தனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு  பாராட்டுச் சான்றிதழையும், பதக்கமும்,  வழங்கப்பட்டது.