மாமல்லபுரம், அக்.23- காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்ல புரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்து பேசினர். இதனால் மாமல்ல புரத்தில் சாலையோரம் இருந்த கடை கள் அகற்றப்பட்டன. தலைவர்கள் சென்ற பிறகு மீண்டும் கடை அமைத்துக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தி ருந்தது. ஆனால் மீண்டும் கடை அமைத்தபோது அதிகாரிகள் கடைகளை அப்புறப்படுத்தினர். பின்னர் முறைசாரத் தொழி லாளர்கள் சங்கம் (சிஐடியு) மாவட்ட ஆட்சியரை சந்தித்து கடை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட முறைசாரத் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் மாவட்ட துணைச் செயலாளர் முரளி தலை மையில், பேரூராட்சி அலுவலகம் முன்பு புதனன்று (அக். 23) வியாபாரி கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும், பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருபவர்களை வெளி யேற்றக்கூடாது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை அமல்ப டுத்த வேண்டும், வியாபாரிகளை முறையாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும், சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச குடிநீர், கழிவறை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பா ட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார், சிபிஎம் மாவட்டச் செயலாளர் இ.சங்கர், முறைசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் இ.ராமமூர்த்தி, மாவட்டச் செயலாளர் க.பகத்சிங் தாஸ், சிபிஎம் திருக்கழுக்குன்றம் பகுதி செயலாளர் எம்,குமார், திருப்போரூர் பகுதிச் செயலாளர் எம்.செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
இடம் ஒதுக்கீடு
பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டாட்சியருடன் முறைசாராத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஐந்துரதம் பகுதியில் வியாபாரம் செய்தவர்களுக்கு, அப்பகுதியில் உள்ள நுழைவுத் கட்டணம் வழங்கும் இடத்திலும், கலங்கரை விளக்கம் பகுதியில் வியாபாரம் செய்தவர்களுக்கு சிற்பக்கல்லூ ரிக்கு சொந்தமான இடத்திலும், அர்ச்சுனன் தபசு மற்றும் வெண்ணெய் உருண்டை பகுதியில் வியாபாரம் செய்தவர்களுக்கு, வாகன நிறுத்து மிடம் பகுதியிலும், கடற்கரை கோயில் பகுதியில் வியாபாரம் செய்தவர்கள் அப்பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்திலும், கடற்கரை பகுதியில் வியாபாரம் செய்தவர்கள் கடற்கரை கோயில் சுற்றுச்சுவரின் ஓரமாகவும் விற்பனை செய்து கொள்ள இடம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் வியாபாரிகள் கடையை அமைத்துக் கொள்ளலாம் என அதிகாரிகள் கூறினர்.