காஞ்சிபுரம், பிப்.17- காஞ்சிபுரம் மாவட்டத் தில் ஸ்ரீபெரும்புதூர் பகுதி யில் செயல்பட்டுக் கொண்டி ருந்த தென்கொரிய நிறு வனங்களான சோவல் , டாங்சன் தொழிற்சாலைகள் கடந்த ஆண்டு எவ்வித முன் அறிவிப்பும் இன்றி திடீரென மூடப்பட்டது. ஆலை மூடல் குறித்து வழக்குகள் தொழி லாளர் துறையில் நிலுவை யில் உள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட தொழி லாளர்களுக்கு இதுவரை எந்த நிவாரணமும் கிடைக்க வில்லை. இவ்விரு ஆலைகளும் மூடப்பட்டுள்ளதால், அதில் பணிபுரிந்து வந்த 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இல்லாமல் பட்டினி யில் வாடுகிறார்கள். மேற்படி ஆலைகள் மூடுவதற்கு ஹூண்டாய் மற்றும் அவரின் நிறுவனங்களே பிர தான காரணமாகும் எனக் கூறப்படுகிறது. ஆலை மூடலுக்கு காரணமான ஹூண்டாய் மற்றும் அவா சின் கொரிய ஆலைகளில் வேலை இழந்த தொழி லாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும். வேலை இழந்த தொழிலாளர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் போன்ற கோரிக் கைகளை வைத்து காஞ்சி புரம் மாவட்ட ஆட்சியரிடம் தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம் திங்கட்கிழமை (பிப்.17 ) நடத்தினர். மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகத்தின் வெளியில் இருந்து வரிசையாக ஒருவர் பின் ஒருவராக அணி வகுத்து ஆட்சியர் அலுவல கத்தில் ஆட்சியர் பா.பொன் னையாவிடம் தனித்தனியாக மனு கொடுத்து, ‘வேலை இல்லாமல் வாடுகிறோம். பட்டினியால் வாடும் எங்க ளுக்கு வேலை வழங்க வேண்டும்’ என கோரி மனு கொடுத்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, இது குறித்து உரிய விசாரணை நடத்தி வேலை இழந்த தொழிலாளர்களுக்கு வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தார். இந்த மனு கொடுக்கும் போராட்டத்திற்கு சிஐடியு தலைவர் இ.முத்துக்குமார் தலைமை தாங்கினார். டாங்சன் இந்திய தொழி லாளர் சங்கத் தலைவர் எஸ்.கண்ணன் தொழிலாளர்க ளிடம் மனு கொடுக்கும் போராட்டம் குறித்து உரை யாற்றினார். சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் சசிதரன், ஆர்.மதுசூதனன், கே.ஜீவா, ஜி.எஸ்.வெங்கடேசன் , இ.பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.