காஞ்சிபுரம்,பிப்.07- சாம்சங் தொழிலாளர்கள் 3ஆவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
சங்கம் அமைத்ததற்காகத் தொழிலாளர்களைப் பலி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் சாம்சங் நிர்வாகத்தைக் கண்டித்து தொழிலாளர்கள் 3ஆவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இரவில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய தொழிலாளர்களுக்கு சிஐடியு கொடுத்த போர்வையைக் கூட நிர்வாகம் உள்ள அனுமதிக்கவில்லை எனத் தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.