காஞ்சிபுரம்:
தொழிலாளர் வர்க்கத்தின் கூட்டுப் பேர உரிமையை பாதுகாக்க போராடுவோம் என்று சிஐடியு மாநாட்டுப் பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் சூளுரைத்தனர். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற சிஐடியு மாநாட்டு பொதுக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசியதாவது:
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படுவது தொழிலாளர்கள் தான். முதலாளி களுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் கொடுத்து அவர்களின் நட்டத்தை அரசாங்கம் ஈடுகட்டுகிறது. ஆனால் தொழிலாளியின் நிலை கேள்விக்குறிதான். முதலாளிகள் செலுத்தவேண்டிய வரியை ஈடுகட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியா வசிய பொருட்களின் மீது மத்திய அரசு வரி சுமத்துகிறது. மோட்டார் வாகனம் வாங்குபவர்களிடம் காப்பீடு தொகை, சாலைவரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் வசூலிக்கப்படுகிறது. ஆனால் சாலைகளில் டோல் அமைத்து கட்டாயக் கட்டணம் பறிக்கப்படுகிறது. தனியார் சுங்கச்சாவடிகளுக்கு நிறுவனங்களுக்கு மாநில அரசு போக்குவரத்துக் கழகம் ரூ.250கோடியை கட்டணமாக வழங்கியுள்ளது. மேலும் இது பொதுமக்களிடமிருந்து சுமார் 3 லட்சம்கோடி ரூபாயை கட்டணமாக வசூலித்துள்ளது. மத்திய அரசின் இந்த சட்டத்தை குஜராத், மகாராஷ்டிர மாநிலங்கள் ஏற்க மறுத்துள்ளது.
தமிழகத்தில் ஒரு லட்சம் ஐடி தொழிலாளர்களின் வேலை பறிக்கப்பட்டால் மோட்டார் வாகனவிற்பனையில் மந்தம் ஏற்படாதா? மக்களைஆளத்தெரியாத ஆட்சியாளர்கள் சரித்திரத்தின்குப்பைத்தொட்டியில் தூக்கி எறியப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை. தொழிலாளர்களை வஞ்சிக்கும் ஆட்சியாளர்களை எதிர்க்க மக்கள் பலத்தை திரட்டுவோம். தொழிலாளர்களின் கூட்டுபேர உரிமையை எதிர்க்கும் சக்திகளை வேரறுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
ஜி.சுகுமாறன்
சிஐடியு மாநிலப்பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் பேசுகையில்,சிஐடியு மாநாட்டில் தொழிலாளர்கள் பிரச்சனைகள் குறித்தும் தொழிலாளர்கள் அணித்திரட்டல் குறித்தும் 4 நாட்கள் விவாதிப்பது பிற அமைப்பினருக்கு வியப்பாக இருக்கிறது. இது யாரையும் துதிபாடும் மாநாடு அல்ல, உழைப்பாளி மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள சூழலில் தொழிலாளி வர்க்கத்தின் நலனையும் அதனை காப்பாற்றும் உத்தியை வகுக்கும் மாநாடு. இருப்பினும் 4 நாட்கள் போதவில்லை. அவ்வளவு தொழிலாளர் பிரச்சனைகள். அரசின் கொள்கைகளினால் வேலையிழக்கும் தொழிலாளர்களுக்கு அவர்கள் வாழ்வதற்கான நிவாரணம் என்ற புதிய கோரிக்கைகள் வைக்கவேண்டியுள்ளது. வேலையில்லா இளைஞர்களின் பிரச்சனை பெருகிக்கொண்டே வருகிறது. அவர்களுக்கும் நிவாரணம் கொடுக்கவேண்டும். உரிமைகள் மறுக்கப்பட்ட வெளிமாநிலத்தொழிலாளர் அணிதிரட்டி அவர்களுக்காகவும் போராட வேண்டியுள்ளது. கைத்தறி, விசைத்தறி பட்டுத்தறியை அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளோடு மாநாட்டின் முடிவாக தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களைநவம்பர் 19 அன்று சந்திக்க உள்ளோம்.கோரிக்கை பதாகைகளோடு இருசக்கரவாகனங்களில் வீதிவீதியாக சென்று தொழிலாளர்களை யும் மக்களையும் சிஐடியு சந்திக்க உள்ளது என்றார்.
கேள்விக்குறியாகும் பெண் தொழிலாளர் பாதுகாப்பு
பெண் உழைப்பாளர்கள் பல்வேறு பிரச்சனைகளை பணியிடங்களில் சந்தித்து வருகின்றனர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் பணி புரிகின்றனர். இவர்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பு என்பதுகேள்விக்குறியாகவுள்ளது. அதே போன்றுபெண் தொழிலாளர்களின் பாதுகாப்பானபோக்குவரத்து என்பதும் கேள்விக்குறியாக வுள்ளது. இதை செய்து தருவது மாவட்ட நிர்வாகத்தின் கடமை.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் தொழிற்சாலைகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பெண்கள் வந்து பணி புரிகின்றனர். இங்கு தங்கி பணிசெய்யும் பெண் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பான தங்கும்விடுதி இல்லை. இதைப்பற்றி இந்த அரசுசிந்திக்கின்றதா என்றால் இல்லை. அதேபோல் பணிக்கு செல்லும் பெண்கள் தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக விட்டுச் செல்வதற்கான குழந்கைள் காப்பகம் இல்லை. மிகவும் அவசியமான குழந்தைகள் காப்பகத்தை ஏற்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். காஞ்சிபுரம் மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பணிக்குச் செல்லும் பெண்களின் குழந்தைகளை விட்டுச் செல்ல குழந்தைகள் காப்பகத்தை அரசு ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும் ஜி.சுகுமாறன் வலியுறுத்தினார்.