tamilnadu

img

34-வது மாவட்டமாக உருவானது கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி, நவ.26- கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்டம் இணையும் வி.கூட்டுரோடு பகுதியில் 1,866 ஏக்கரில் ஆசியாவிலேயே நவீன, பெரிய கால்நடை பூங்கா  உருவாக்கப்படும் என கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற புதிய மாவட்ட துவக்க விழாவில்  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். தமிழகத்தின் 34வது  மாவட்டமாக விழுப்புரத்தி லிருந்து பிரிக்கப்பட்ட கள்ளக் குறிச்சி மாவட்ட துவக்க விழா வில் உரையாற்றிய தமிழக  முதல்வர் மேலும் கூறுகை யில்,“இந்த கால்நடை பூங்கா விற்கான உட்கட்டமைப்பிற்கு மட்டும் ஆயிரம் கோடி ரூபா யும், கால்நடை ஆராய்ச்சி மையம் மற்றும் கல்லூரி அமைக்  கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.

கள்ளக்குறிச்சி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுற்றுவட்ட சாலை  அமைக்கப்படும். உளுந்தூர் பேட்டை அரசு மருத்துவமனை உட்கட்டமைப்பு சிறந்த முறை யில் மேம்படுத்தப்படும். ரிஷி வந்தியம் பகுதியில் புதிய அரசுக் கல்லூரி தொடங்கப்படும். கண்டாச்சிமங்கலம், கிழக்கு மருதூர், சங்கராபுரம்,  கள்ளக்  குறிச்சி ஆகிய இடங்களில் தடுப் பணைகள் அமைக்கப்படும். உளுந்தூர்பேட்டை பேரூராட்சி யில் 38.67 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை பணி மேற்  கொள்ளப்படும் என பல்வேறு  புதிய திட்டங்களை அறி வித்தார்.\

தமிழக அரசின் சார்பில் வட்டி யில்லா பயிர்க்கடன் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 10,000 கோடி ரூபாய் கொடுக்கப் பட்டுள்ளதாக கூறிய தமிழக முதல்வர், இப்பகுதியில் மானா வாரிப் பயிராக மக்காச்சோளம் அதிக அளவில் விளைந்து அமெ ரிக்கன் படைப்புழுவால் பாதிக்  கப்பட்டபோது விவசாயி களுக்கு இழப்பீட்டுத் தொகை யாக 182 கோடி ரூபாய் அளிக்  கப்பட்டுள்ளதாகவும், அதே போல இப்படைப்புழுவை அழிக்க தமிழக அரசின் சார்பில்  மருந்து அடிப்பதற்காக 42 கோடி  ரூபாய் செலவழிக்கப் பட்டுள்ளது எனவும் கூறினார்.  இவ்விழாவில் குடிமராமத்து திட்டம், பாசன திட்டம், உணவு  பூங்கா, நிலத்தடி நீர் செறிவூட்டும்  திட்டம் என நடைமுறைப் படுத்தப்  பட்ட பல்வேறு திட்டங்களைப் பற்றி கூறிய முதல்வர் 5873 பய னாளிகளுக்கு அவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கி னார்.

நவம்பர் 26 ஆம்தேதி செவ்வாயன்று காலை 11 மணிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை யில் நடைபெற்ற இவ்விழாவில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்மு கம், சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.குமரகுரு, அ.பிரபு, கள்ளக்  குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணா துரை, திட்ட இயக்குநர் மகேந்திரன், செயற்பொறியாளர் இராமகிருஷ்ணன், சர்க்கரை இணைய தலைவர் ஏ.எஸ்.ஏ. ராஜசேகர், கள்ளக்குறிச்சி கூட்டு றவு சர்க்கரை ஆலை தலை வர் எஸ்.எஸ்.அரசு, விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலை வர் ராஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காம ராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கா.அழகுவேல்பாபு ஆகியோர் பங்கேற்றனர். உதவி இயக்குனர்கள் ஆர்.ரத்னமாலா, முத்தழகு, உதவி செயற்பொறியாளர் புஷ்பராஜ், இளங்கோ, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி, நடராஜன், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் விஜயகுமார், நக ராட்சி பொறியாளர் மற்றும் ஆணையர் வெங்கடாசலம் உள்ளிட்ட அதிகாரிகளும் இதில்  பங்கேற்றனர். மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் டி.ஜெயச் சந்திரன் பாதுகாப்பு ஏற்பாடு களைக் கவனித்தார்.