உளுந்தூர்பேட்டை,ஏப்.25- லஞ்சம் வாங்க்ய டிஎஸ்பி பிரதீப் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் லாரிகளில் மணல் கடத்த ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 5000 ரூபாய் வசூலிக்க வேண்டும் எனக் காவல் துணை காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவிட்ட ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இந்நிலையில் தகவலறிந்த ஐஜி பிரதீப்பைக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.