tamilnadu

img

நிலத்தடி நீரை காத்த குளங்கள் வற்றின

சிதம்பரம், ஜூன் 18- கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரத்தில் தீர்த்த குளங்களாக கருதப்படும் அண்ணாகுளம், தில்லையம்மன் குளம், ஞான பிரகா சம், ஓமக்குளம், நகச்சேரி குளம், இளமையாக்கினார் குளம், காரியபெருமாள் குளம் உள்ளிட்ட 9 குளங்கள் உள்ளது. இந்த குளங்களை சரியான முறையில் பரா மரிக்காததால் குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளை கொட்டி குளத்தை தூர்துள்ளது. வீடுகளின் சாக்கடை கழிவு களும் குளத்தில் வந்து சேர்வ தால் குளம் மாசடைந் துள்ளது. மேலும் குளத்தின் கரை களில் ஆக்கிரமிப்பு செய்  துள்ளதால் மிகப்பெரிய குளங்களாக இருந்த அவை கள் தற்போது குட்டைகளாக காணப்படுகிறது. இந்த குளங்கள் அனைத்திலும் தண்ணீர் இருந்தால் கோடை யில் சிதம்பரத்தின் சுற்று வட்டாரப் பகுதிகளில் குடிநீர்  பிரச்சனை ஏற்படாது. நிலத்  தடிநீர் மட்டமும் குறையா மல் உவர்நீர் நிலத்தடியில் உட்புகாமல் இருக்கும். போதிய மழை இல்லாததால் இந்த குளங்கள் வற்றிப் போயுள்ளன. இன்னும் சில  தினங்களில் சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் குடி நீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மேற்கண்ட குளங்களில் உள்ள ஆக்கிர மிப்புகளையும், குப்பைக் கழிவுகளையும் அகற்ற வேண்டும் எனவும், குளங்  களை தூர்வாரி ஆழப்ப டுத்தி பாதுகாக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிதம்பரம் நகரத்திலுள்ள ஞானப்பிரகாசம் குளக்கரை யில் வசிக்கும் பொதுமக்க ளின்  வீடுகள் ஆக்கிரமிப்பில்  உள்ளது என்றும்,   காலி செய்ய வேண்டும் என்றும் சிதம்பரம் நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.  இதனை பெற்றுக்கொண்ட அப்பகுதி பொதுமக்கள் சிதம்பரம் வட்டாட்சியர் அலு வலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் மாவட்ட வரு வாய் அலுவலர் ராஜகிருபாக ரனை சந்தித்து  குடியிருக்க  மாற்று இடம் கொடுத்து விட்டு எங்கள் வீடுகளை காலி  செய்ய நடவடிக்கை எடுங்கள்  என்று மனுகொடுத்தனர்.  மனுவை பெற்ற அவர் வரு வாய் மற்றும் நகராட்சி அதி காரிகளிடம் கலந்து பேசி  உரிய நடவடிக்கை எடுப்ப தாகக் கூறினார்.