கடலூர், செப்.11- கடலூர் வட்டம் தியாகவல்லியில் ராஜதுரை என்பவர் தனது நிலத்தில் பனங்கிழங்கு விளைவிப்பதற்காக பள்ளம் தோண்டியுள்ளார். அப்போது, அங்கு கற்சிலை கிடைப்பதை கண்டதும் கிராம நிர்வாக அலுவலர் சுந்தர்ராஜனுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, கடலூர் வட்டாட்சியர் கோ.செல்வகுமார், வருவாய் ஆய்வாளர் ரகுநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் வந்து 3 துண்டுகளாக கிடந்த சிலையை மீட்டு எடுத்து வந்தனர்.பின்னர், அதனை கடலூரிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து காப்பாட்சியர் ஜெயரத்னா கூறுகையில்,“ இந்த சிலை 16 அல்லது 17 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த பிடாரியம்மன் சிலை” என்றார். சிலையின் பீடம், இடுப்புப் பகுதி, தலைப்பகுதி ஆகிய 3 துண்டுகளாக கண்டெடுக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வறிக்கையை தயார் செய்து வருகிறோம். அதில் தான் சிலையின் உண்மையான வயதினை கண்டுபிடிக்க முடியும்” என்றார் கூறினார்.