tamilnadu

கைத்தறி நெசவாளர்களுக்கு அரசு அறிவித்த கூலி உயர்வை வழங்குக! தமிழக முதல்வருக்கு கோரிக்கை

கடலூர், செப். 18- அரசு தீர்மானித்த கூலியை வழங்காமல் ஏமாற்றும் கூட்டுறவு சங்க அதிகாரிகள் மீது  நடவடிக்கை எடுக்கக் கோரியும், அரசு தற்போது அறிவித்துள்ள புதிய கூலி உயர்வை  வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழக முதலமைச்சருக்கு மனு அனுப்பப் பட்டுள்ளது. கடலூர் மாவட்ட கைத்தறி நெசவு பாபு  பட்டறை தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத்  தலைவர் ஆர்.ஆளவந்தார், மாவட்டச் செய லாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி, பொருளாளர் இ.தயாளன் ஆகியோர் தமிழக முதலமைச்ச ருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ள தாவது:- கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கைத்தறி கூட்டுறவு சங்கங்களிலும் கைத்தறி  நெசவாளர்கள் மற்றும் பெடல் தறிக்கு ஏற்க னவே அரசு அறிவித்த கூலி சேலை ஒன்றுக்கு  85 ரூபாய் 67 காசுகள், வேட்டி ஒன்றுக்கு 69  ரூபாய் 75 காசுகள், மற்றும் இலவச சீருடை  திட்டத்தின் கீழ் மீட்டர் ஒன்றுக்கு 11 ரூபாய் 35 காசுகள். ஆனால் பெடல் தறி நெசவாளர்களுக்கு இதுவரை 1.8.2019 வரை சேலைக்கு 66 ரூபா யும், வேட்டிக்கு  55 ரூபாய் 40 காசுகள், இலவச  சீருடைக்கு மீட்டருக்கு 7 ரூபாய் மட்டுமே வழங்கி வருகிறார்கள். அரசு தீர்மானித்த கூலியை வழங்க வேண்டும் என்று கேட்டால் இதுவரை கூட்டு றவு நிர்வாகம் தர மறுக்கிறது. தற்பொழுது தமிழக அரசு புதிய கூலி அறிவிப்பை சட்டப்  பேரவையில் விதி எண் 110-ன் கீழ் வெளி யிட்டுள்ளது. அதன் அடிப்படையில் வேட்டி ஒன்றுக்கு 69 ரூபாய் 58 காசுகள்,  சேலை ஒன்றுக்கு 90 ரூபாய் 25  காசுகள்,  இலவச சீருடை திட்டத்திற்கு மீட்டர் ஒன்றுக்கு 12 ரூபாய் 16 காசுகளும் வழங்க வேண்டும். அரசு அறிவிப்பு வெளியிட ஒருமாத காலம் ஆகிறது, ஆனால் தற்போது வரை  பெடல் தறி நெசவாளர்களுக்கு புதிய கூலியை  வழங்க மறுப்பது, பழைய கூலியையும் குறைத்தே வழங்குகின்றனர். எனவே அனைத்து தொழிலாளர்க ளுக்கும் அரசு அறிவித்த கூலியை வழங்க மறுக்கும் கூட்டுறவு சங்க அதிகாரி மீது கடுமை யான நடவடிக்கை மேற்கொண்டு, தற்போது  தீர்மானிக்கப்பட்டுள்ள உயர்த்தப்பட்ட கூலி யையும் சேர்த்து பெடல் தறி நெசவாளர்க ளுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டு கிறோம். லுங்கி தயார் செய்யும் கைத்தறி நெசவாளர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்கப்படவில்லை எனவே அவர்களுக்கும் 40 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கோரப் பட்டுள்ளது.