tamilnadu

img

கடலூர் மாவட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக: என்எல்சி தலைவரிடம் வலியுறுத்தல்

கடலூர், மே 22-என்எல்சி தலைவர் ராக்கேஷ் குமாரை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி தலைமையில் சந்தித்த வெகுஜன அமைப்புகளின் தலைவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.அந்த மனுவின் விவரம் வருமாறு:-என்எல்சி நிர்வாகம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். வேலைவாய்ப்பில் கடலூர் மாவட்ட இளைஞர்களுக்கும், நிலம் கொடுத்த விவசாயிகளுக்கும், என்எல்சியில் பணியாற்றும் வாரிசுகளுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும், மூன்றாவது சுரங்கத்திற்கு விவசாயிகளின் நிலத்தை கட்டாயப்படுத்தி கையகப்படுத்தக் கூடாது. என்.எல்.சி நிறுவனம் சி.எஸ். ஆர் நிதியில் கடலூர் மாவட்டத்திற்கு முன்னுரிமை அளித்து அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண் டும் என அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது.இந்த அமைப்புகளின் சார்பில் நெய்வேலியில் அண்மையில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களை விளக்கி என்எல்சி தலைவர் ராகேஷ் குமாரிடம் மனு அளித்து அதனை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர். சந்திப்பின் போது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி, சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.பாஸ்கரன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலாளர் ஜி.மாதவன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பிரகாஷ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் டி.கிருஷ்ணன், என்எல்சி சிஐடியு தலைவர் ஏ.வேல்முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.