ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரத்தில் அனைத்து விவசாய சங்கங்களின் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காவிரி டெல்டா பாசன விவசாய சங்ககளின் கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன் தலைமை வகித்தார். டெல்டா நீர் ஆதார அமைப்பின் தலைவர் கிள்ளை ரவீந்திரன் கலந்துகொண்டார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டதுணைத் தலைவர்கள் கற்பனைச் செல்வம், பிரகாஷ், கடலூர் மாவட்ட அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பின் தலைவர் காங்மாங்குடிவெங்கடேசன், அணைக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் சிவசரவணன், சேத்தியாதோப்பு அணைக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் விஜயகுமார், தமிழக உழவர் முன்னணியை சார்ந்த நிர்வாகிகள் குபேரன், மதிவாணன், விவசாயிகள் கோபால், ராமலிங்கம், காளிகோவிந்தாஜ், குஞ்சிதபாதம் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டு ஹைட்ரோகார்பன் திட்டத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விரிவாக பேசினர்.