tamilnadu

img

குடிநீர் குழாயில் உடைப்பு: அதிகாரிகள் அலட்சியம் 

 கடலூர், ஜூன் 17- கடலூர் பெருநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டினை போக்கும் வகையில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் அமல்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்  பணியை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொண்டு  வருகின்றது. கடந்த 10 நாட்களாக புதிதாக குழாய் அமைக்கும்  பணி திருவந்திபுரம் சாலையில் நடை பெற்று வருகிறது.  இந்நிலையில், திருப்பாதிரிபுலியூர் சுப்புராயசெட்டி தெரு வில் ஏற்கனவே குடிநீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு  தண்ணீர் வெளியேறியது. இதனைத் தொடர்ந்து, அதனை சரிசெய்யும் பணியில் நகராட்சியினர் ஈடுபட்டனர். இதுகுறித்து, நகராட்சி தரப்பில் கூறுகையில், புதிய குடி நீர் குழாய் அமைக்கும் முன்பே சாலைக்கு உட்புறம் ஏற்கனவே  அமைக்கப்பட்டுள்ள குடிநீர் மற்றும் புதை சாக்கடை திட்ட  பிரதான குழாய்கள் செல்வதை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரி யம் மற்றும் தனியார் ஒப்பந்ததாரருக்கும் தெரிவித்துள்ளோம். ஆனால், சோதனை குழிகளை 30 மீட்டருக்கு ஒன்று என்ற விகி தத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் அமைக்கா மல் அலட்சியப் போக்குடன் நேரடியாக குழாய் அமைக்கும்  பணியினை துவக்கியதால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடிநீருக்கான பிரதான குழாயில் சேதம் ஏற்பட்டதால் குடிநீர் உந்துவது நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருப்பாப் புலியூர், பத்மாவதி நகர், அண்ணாநகர், கே.கே  நகர், தேவனாம்பட்டினம் பகுதிகளில் (வார்டு எண்.9 முதல்  28 வரை) உள்ள உயர்நிலை நீர்தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கும் பணி நடைபெறாது என்று தெரிவித்தனர். கோடைக்காலத்தில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலை யில் ஒரு துறையின் அலட்சியப்போக்கினால் குடிநீர் வீணாகுவதுடன், பொதுமக்களுக்கும் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள் ளது. எனவே, அரசுத்துறையினர் ஒருங்கி ணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது. நகராட்சி யின் குளருபடியால் தனியார் தண்ணிர் விற்பனை அமோக மாக நடைபெறுகிறது. குடம் தண்ணிர் ரூ.10 கொடுத்து வாங்கும் நிலைக்கு கடலூர் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.