tamilnadu

img

அதிகரிக்கும் கொரோனா தொற்று.... பாகிஸ்தானில் விரைவில் ஊரடங்கு 

இஸ்லாமாபாத் 
நமது அண்டை மாநிலமான பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பரவல் தொடக்கத்தில் மந்தமாக இருந்தது. ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்து அங்கு கொரோனா வைரஸ் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது.தினமும் அங்கு 500-க்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டாலும் அந்நாட்டு அரசு பொது ஊரடங்கு விதிக்காமல் கொரோனா பாதிப்புள்ள பகுதியில் மட்டும் ஊரடங்கு விதிக்கப்பட்டு அந்த பகுதியை தீவிரமாக  கண்காணித்து வருகிறது.  

தற்போது அங்கு 5716 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 96 பேர் பலியாகியுள்ள நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 200-க்கும் அதிகமானோர் புதிதாக கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

இந்நிலையில் நேற்று பாகிஸ்தான் நாட்டின் மாகாண முதல்வர்கள் கூட்டம் நடைபெற்றது அந்தக் கூட்டத்தில் நாளை பொது ஊரடங்கு அறிவிப்பது குறித்து அறிவிக்கப்படும் என அந்நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார். இதனால் பாகிஸ்தானில் விரைவில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.