அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 80 பேர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஈராக்கில் அமெரிக்கா ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் ஈரான் நாட்டின் புரட்சிகர படையின் தளபதி காசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்டார். ஈரானில் உள்ள 52 புராதன சின்னங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று வெளிப்படையாக அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காசிம் சுலைமானியின் மரணத்திற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதைத்தொடரந்து ஈராக்கில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளங்களை குறிவைத்து ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க ஹெலிகாப்டர்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் கடும் சேதம் அடைந்துள்ளது. மேலும் 80 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் சர்வதேச அளவில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.