tamilnadu

img

பாஞ்சாலத்துச் சிங்கம் தோழர் சுர்ஜித்

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெருந் தலைவரும், இந்திய விவசாய மக்களிடை யே மிகவும் பிரபலமான தலைவருமான தோழர் சுர்ஜித், 1916 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதியன்று ஹர்னாம் சிங்-குர்பச்சன் கவுர் தம்பதியின் புதல்வராகப் பிறந்தார். அவர்பிறந்த ரூப்வால் கிராமமானது பஞ்சாப் மாநிலத்தின் ஜலந் தர் மாவட்டத்தில் உள்ளது.மாணவப் பருவத்திலேயே துவங்கிய சுர்ஜித்தின் சுதந்திரவேட்கையும், அரசியல் உணர்வும் படிப்படியாக அவரை புரட்சி வீரர் பகத்சிங்கின் எழுச்சி மிகு போராட்டத்திற் குள் கொண்டு வந்து சேர்த்தது.சுர்ஜித் தன்னை பகத்சிங் மற்றும் அவருடைய சக தோழர்கள் உரு வாக்கியிருந்த நவ்ஜவான் பாரத் சபா என்ற அமைப் பில் உறுப்பினராகப் பதிந்து கொண்டார். அச்சம யத்தில் சுர்ஜித்துக்கு 14 வயதே நிரம்பி இருந்தது. அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பகத்சிங். பிரச்சார செயலாளர் பகவதிசரண் வோரா. ‘‘புரட்சி ஓங்குக ஏகாதிபத்தியம் ஒழிக’’ என்பதே இந்த அமைப்பின் பிரதான முழக்கங்களாகும். இந்த அமைப்பின் கதாநாயகனாக பகத்சிங் விளங்கி வந்தார். அவர் சுர்ஜித்திற்கும் கதாநாயகனாக விளங்கினார்.பகத்சிங்கும் அவரது சகதோழர்க ளான சுகதேவ், ராஜகுரு ஆகியோரும் 1931ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி தூக்கிலிடப்பட்டனர்.

இது சுர்ஜித்திற்கு மிகுந்த அதிர்ச்சியையும் கொதிப்பையும் ஏற்படுத்தியது.இந்நிலையில், ஹோசியார்பூரில் பகத்சிங்கின் முதலாவது நினைவு நாளையொட்டி காங்கிரஸ் கட்சி ஒரு அறிவிப்புச் செய்திருந்தது. அந்த நாளில் பஞ்சாப் பின் ஆளுநர் அந்நகருக்கு வருவதாக இருந்தது. எனவே அங்குள்ள மாவட்ட நீதிமன்றத்தின் உச்சி யில் பறக்கும் ஆங்கிலேய அரசாங்கத்தின் கொடி யை இறக்கி விட்டு தேசியக் கொடியை பறக்கவிடு வது என்பதுதான் காங்கிரஸ் அறிவிப்பு.இதை யறிந்த மாவட்ட ஆட்சித் தலைவர் இந்தத் திட் டத்தை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கத்து டன் நீதிமன்றத்தைச் சுற்றிலும் ராணுவத்தை நிறுத்தி வைத்தார். அத்துடன், யாராவது அங்கே தேசியக் கொடியை ஏற்ற வந்தால் சுட்டுத் தள்ளப்படுவார் கள் என்று அறிவித்தார். இது நாட்டிற்கும், நமக்கும், நமது இயக்கத்திற்கும் பெருத்த அவமா னம் என்று கருதினார் சுர்ஜித். தேசியக் கொடியை ஒரு குச்சியில் கட்டிக்கொண்டு அங்கிருந்த நீதி மன்ற வளாகத்தை நோக்கிச் சென்றார். அங்கி ருந்த காவலர்கள், காங்கிரஸ்காரர்கள் கொடியை ஏற்றப்போவதாகச் சொன்ன நேரம் முடிவடைந்து விட்டதாக சற்று ஓய்வாக இருந்தனர். இதைப் பயன்படுத்திக்கொண்டு சுர்ஜித் ஆங்கிலேயக் கொடியை இறக்கிவிட்டு தேசியக் கொடியை ஏற்றினார். ராணுவ வீரர் ஒருவர் சுர்ஜித்தைப் பார்த்து சுட்டார். அடுத்த நாள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சுர்ஜித்திடம் நீதிபதி, உன் பெயர் என்ன என்று கேட்டார். அதற்கு சுர்ஜித் ‘‘லண் டனைஉடைக்கும்சிங்’’ என்று கூறிவிட்டு பகத் சிங்கைப் பற்றி புகழ்ந்து பேசினார். இறுதியாக அந்தநீதிபதி சுர்ஜித்திற்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்தார். உடனே சுர்ஜித் அவரைப் பார்த்து இதற்கு ஒருவருடம் தானா தண்டனை என்று கேட்டார்.

இந்த வழக்கில் இதற்கு மேல் தண்டனை வழங்க முடியாது என்று நீதிபதி கூறினார். இந்தத் தகவல் வெளியானதும் சுர்ஜித்தின் தந்தையாரின் நண்பர்கள் அவரை சிறைக்குச் சென்று பார்த்து அவருடைய துணிச்சலுக்காக அவரைப் பாராட்டி னர். இப்படிப்பட்ட துணிச்சலும், தீரமும், விடு தலைக்காக துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப் படத் தயாராகயிருந்த அசைக்க முடியாத விடு தலை வேட்கையும், அன்றைய ஆர்எஸ்எஸ் - மத வெறிக் கூட்டத்தின் எந்தத்தலைவரிடம் இருந்தது? அவர்கள் ஆங்கிலேயஆட்சிக்கு பல்லக்கு தூக்கினார்கள். விடுதலை இயக்கத்தின் மகத்தான வீரராக துவங்கி, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பெருமைமிகு தலைவராக உயர்ந்த தோழர் சுர்ஜித், 1992ஆம் ஆண்டில் சென்னையில் நடை பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 14வது மாநாட்டில் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக் கப்பட்டார். 1992 முதல் 2004 ஆம்ஆண்டு வரைப் பட்ட காலத்தில் அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை இந்திய அரசியல் அரங்கத்தில் மைய மாகக் கொண்டுவந்து நிறுத்தினார். இந்திய மக்களின் ஒற்றுமையைக் காப்பதில் அவர் பெரும் பங்காற்றினார். அவர் ஜனநாயக சக்தி களை அணி திரட்டி, பிற்போக்கு சக்திகளுக்கு எதிராக - குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் இந்துத்துவா மதவெறி சக்திகளுக்கு எதி ராக போராட்டங்களை உருவாக்கினார்.மதவெறி சக்திகள் மற்றும் சங்பரிவாரத்தின் முயற்சிக ளுக்கு எதிராக ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டு வதற்கான சுர்ஜித்தின் முயற்சிதான் முதல் ஐக்கிய முன்னணிஅரசாங்கத்தை மத்தியில் உரு வாக்கியது. 1996இல் ஐக்கிய முன்னணி அர சாங்கம் மத்தியில் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னர் வி.பி.சிங் தலைமையில் தேசிய முன்னணி அரசாங்கம் உருவாக 1989 ஆம் ஆண்டில் சுர்ஜித்மகத்தான பங்கினை ஆற்றி னார். இந்த காலகட்டத்தில் எந்த ஒரு தேசியத் தலைவருடைய கருத்தோட்டமும் மதச்சார்பற்ற சக்திகளால் மிக உன்னிப்பாகவும் மரியாதையு டன் கேட்கப்பட்டது என்றால் அது சுர்ஜித்தினுடை யது தான். இந்துத்துவா சக்திகளின் தாக்குதலை எதிர்த்து மதச்சார்பற்ற பதாகையை உயர்த்திப் பிடித்ததற்கு இந்த நாடு சுர்ஜித்திற்கு பெரும் கடமைப்பட்டிருக்கிறது.