புதுதில்லி:
இந்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில், சோசலிஸ்டுகள் மற்றும் ஜனநாயகவாதிகளின் முற்போக்கு கூட்டணி, ஐரோப்பிய யுனைடெட் லெப்ட்,நோர்டிக் கிரீன் லெப்ட் கட்சிகள், கிரீன்ஸ் - ஐரோப்பா பிரீ லைன்ஸ் கட்சி,ரினீவ் ஐரோப்பா குரூப் உள்ளிட்ட ஐந்து குழுக்கள் தாக்கல் செய்திருந்த இந்த கூட்டுத் தீர்மானத்தின் மீது வியாழக்கிழமையன்று பிற்பகலில் வாக்கெடுப்பு நடைபெறுகிறது.