மலேசியாவில் தற்போது பாதியளவு முடக்கநிலை அமலில் உள்ளநிலையில், அந்நாட்டின் பெண்கள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட கார்ட்டூன் ஒன்றுக்கு அந்நாட்டின் அரசு மன்னிப்பு கோரியுள்ளது.
முடக்கநிலை அமலில் உள்ளநிலையில், வீட்டில் இருக்கும் பெண்கள் தங்கள் கணவர்களுக்கு பிடித்தவகையில் நன்கு உடையுடுத்த வேண்டுமென்றும், அலங்காரம் செய்துகொள்ள வேண்டுமென்றும், அதே வேளையில் வீட்டில் இருக்கும் கணவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்றும் அந்த கார்ட்டூன்களில் சித்தரிக்கப்பட்டிருந்தது.
இது பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது என சமூக ஊடகங்களில் பரவலாக எதிர்ப்பு பதிவுசெய்யப்பட்ட நிலையில், இந்தகார்ட்டூன், யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் வெளியிட்டது அல்ல என விளக்கமளித்து அரசு சார்பில் மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.