கொரோனா தொற்று பரவல் நாட்டின் நிலைமையை தலைகீழாக மாற்றிவிட்டது. குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை கேள்விக்குறியாக மாறி விட்டது. இந்தச் சூழலில் பள்ளி ஆசிரியர், உணவக மேலாளராகப் பணியாற்றியவர்கள் வேலை பறிபோனதால் நூறுநாள் வேலைத் திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.
ராஜஸ்தானில்...
ஜெய்ப்பூரை அடுத்துள்ள ஜோப்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமவதார் (35). இவர் ஜோப்நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். மாதஊதியமாக ரூ.15 ஆயிரம் வாங்கிவந்துள்ளார். கொரோனா ஊரடங்கால் பள்ளி மூடப்பட்டது. நிர்வாகம் இவரை வீட்டுக்கு அனுப்பி விட்டது. சேமிப்பு பணமும் தீர்ந்துவிட்டது. வேறுவழியின்றி நூறுநாள் வேலைத் திட்டத்தில் சேர்ந்து கூலித் தொழிலாளியாக மாறிவிட்டார்.\
இதுகுறித்து ராமவதார் கூறுகையில், “ஊரடங்கால் பள்ளி பூட்டப்பட்டது. அதிகாரிகள் சம்பளம்கொடுக்க மறுத்து என்னை பணிநீக்கம் செய்துவிட்டனர். அனைத்து தொழிற்சாலைகளும், சந்தைகளும் மூடப்பட்ட நிலையில், பணம் சம்பாதிக்க எனக்கு வேறு வழியில்லை” என்றார்.சீதா வர்மா (30) பட்டதாரி. இவரதுகணவர் ஷங்கர் லால். பள்ளி ஆசிரியராக பணியாற்றிவந்தார். கொரோனா ஊரடங்கால் லால் வேலையை இழந்துவிட்டார். வருமானத்திற்கு வேறுவழியில்லை. பட்டதாரியான சீதா தனது குழந்தைகளைக் காப் பாற்ற மே 16- ஆம் தேதி முதல் நூறுநாள் வேலைத்திட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டு பணியாற்றி வருகிறார்.சீதா கூறுகையில், “நான் என் வாழ்க்கையில் முதல் முறையாக கடுமையான வெயிலில் இதுபோன்ற வேலையை செய்கிறேன். மார்ச் மாதத்திலிருந்து எனது கணவருக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. 100 நாள் வேலை அட்டை பெறுவதைத் தவிர வேறு வழியில்லை” என்றார்.ஆசல்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சகரம் ஜாட் (36) எம்.ஏ. முதுகலை இரட்டை பட்டம் பெற்றுள்ளார். பத்தாம் வகுப்பு வரையிலான பள்ளிமாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து வந்துள்ளார். மார்ச் முதல்அவருக்கு வேலையில்லை. சம்பளமும் இல்லை. அவர் 100 நாள் வேலையில் அட்டை பெற்று பணியாற்றி வரு
கிறார்.சகரம் ஜாட் கூறுகையில், “நான்பணிபுரிந்த பள்ளி மூன்று மாதங்களாக எனக்கு ஒரு பைசா கூட கொடுக்கவில்லை, எனக்கு வேறு வருமானம் இல்லை” என்றார்.
கர்நாடகத்தில்...
கர்நாடகாவின் கடக் மாவட்டத் தைச் சேர்ந்த சதானந்த் முக்கண்ணவர் பெங்களூரில் ஒரு நிறுவனத்தில் பராமரிப்புப் பிரிவில் பொறியாளராக பணியாற்றியுள்ளார். மாதம்ரூ.50,000 சம்பாதித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் அவரது நிறுவனம் அவரை வீட்டுக்குச் செல்லுமாறு கூறிவிட்டது. கொரோனா குறைந்த பின்னர் திரும்பிவருமாறு சொல்லியுள்ளது.சதானந்த் கூறுகையில், “இப்போது 100 நாள் வேலைத்திட்டத்தின்கீழ் கீழ் கடடி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு பண்ணையில் வேலை செய்கிறேன். மீண்டும் பணியில் சேர4-5 மாதங்கள் ஆகலாம். எனவே எதுவுமே இல்லாமல் தவிப்பதை விட இந்த வேலை சிறந்தது” என்றார்.
தமிழகத்தில்...
தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தங்கப் பாண்டியன் (40). திருவாரூரில் ஒருபிரபலமான துணிக்கடையில் விற்பனைப் பிரதிநிதியாகவும், மேலாளராகவும் பணியாற்றி வந்துள்ளார். கொரோனாவால் மார்ச் 25-ஆம் தேதி இவரது கடை மூடப்பட்டது. வீட்டில் அடுப்பு எரியவும், மனைவி மற்றும் இரு குழந்தைகளைக் காப்பாற்றவும் 100 நாள் வேலைத்திட்டத் தில் சேர்ந்துள்ளார்.தங்கப்பாண்டியன் கூறுகையில், “நான் பத்தாம் வகுப்பு வரை படித் துள்ளேன். ஒரு ஜவுளி கடையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்தேன். ஊரங்கால் கடை மூடப்பட்டது. வணிக இழப்பை சுட்டிக் காட்டி எனது நிறுவனம் சமீபத்தில் என்னை நிறுத்திவிட்டது. எனவே 100 நாள் வேலையில் கூலிக்கு வந்துள்ளேன்” என்றார்.
தெலுங்கானாவில்...
தெலுங்கானா மாநிலம் அடிலாபாத்தைச் சேர்ந்த சிரிகிரி ரவி,ஒரு வீடியோகிராபர். திருமண நாட்களில் அவர் ரூ .2 லட்சம் வரை சம்பாதிப்பார். ஊரடங்கால் திருமணங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பல திருமணங்கள் ரத்து செய்யப்பட்டு விட்டன.இது குறித்து ரவி கூறுகையில், “நான் தற்போது 100 நாள் வேலை செய்து வருகிறேன். ஊரடங்கிற்கு முன்பாக ரூ .1.5 லட்சம் மதிப்புள்ளபுதிய வீடியோ கேமிரா வாங்கினேன்.அதை ஒரு முறை கூடபயன்படுத்தவில்லை. அதற்கு செய்த முதலீடு வீணாகிவிட்டது” என்றார்.மகாபூப்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹனுமந்த். ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்த அவர் மாதந்தோறும் ரூ.10,000 சம்பாதித்துள்ளார். ஊரடங்கால் கல்லூரி மூடப்பட்டது. வாழ்வதற்கு வழியின்றி சொந்த கிராமத்திற்கு வந்த அவர் 100 நாள்வேலை செய்துவருகிறார். தினம் தோறும் ரூ.202 அவருக்கு கூலி கிடைக்கிறது.
ஜார்க்கண்டில்...
ஜார்க்கண்ட் கிரிஹ் மாவட்டத் தைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் ரே(30). சென்னையில் ஒரு உணவகத்தில் சமையல்காரராக பணியாற்றியுள்ளார். ஊரடங்கால் தனது கிராமத்திற்குத் திரும்பிவிட்டார். தற்போது 100 நாள் வேலைத்திட்டத் தில் ஒரு தொழிலாளியாக உள்ளார். அவர் கூறுகையில் “ சென்னையில் நான் ஒரு மாதத்திற்கு ரூ .20,000 சம்பாதித்தேன். இலவச உணவு, தங்குமிடம் கொடுத்தார்கள். உணவகம் மூடப்பட்டதால் சொந்த ஊருக்கு வந்துவிட்டேன். ஒரு மாதகாலம் வேலையில்லாமல் இருந்த நான் 100 நாள் வேலையை செய்வதைத் தவிர வேறு வழியில்லை” என்றார்.இவை ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமே! 2004 ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இடதுசாரிகளால்நிர்ப்பந்திக்கப்பட்டு கொண்டுவரப் பட்ட இத்திட்டம்தான் இன்று பலகோடி மக்களின் பசியைப் போக்கி வருகிறது.
(இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் வெளியான விபரங்களுடன்)