tamilnadu

img

ஸ்பெயினில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்குகிறது.... 

மாட்ரிட் 
ஐரோப்பாவில் 4.6 கோடி மக்கள் தொகை கொண்ட ஸ்பெயின் நாடு தற்போது கொரோனவால் அதிக பாதிப்பைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக கொரோனா எழுச்சி பெற்ற காலத்திலிருந்தே ஸ்பெயின் கடும் சேதாரத்தைச் சந்தித்து வரும் நிலையில், கொரோனவால் உருக்குலைந்து கிடக்கும் இத்தாலியை பின்னுக்குத்தள்ளி உலகளவில் 2-வது இடத்திலும் (கொரோனா பதிப்பில்), ஐரோப்பா கண்டத்தில் முதலிடத்திலும் உள்ளது. கொரோனா பலி எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா (40,565), இத்தாலி (23,660) ஆகிய நாடுகள் முதல் இரண்டு இடங்களில் உள்ளது.  

இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் ஸ்பெயினில் 4,200-க்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு 1 லட்சத்து 98 ஆயிரத்தைத் தூண்டியுள்ளது. இதே போலக் கடந்த 24 மணிநேரத்தில்  410 பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.  77 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது.