சின்னாளபட்டி:
திண்டுக்கல் மாவட்டம் ஆத் தூர் தாலுகா கோடாங்கிபட்டி பழைய செம்பட்டி சீவல்சரகுபோடிகமன்வடி பாளையங் கோட்டை பகுதிகளில் உள்ள விவசாயிகள் ரோஜா செடிகளை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். போதிய மழையில்லாத நிலையில் கிணற்று நீரை பயன்படுத்தி ரோஜா செடியை காப்பாற்றி வருகின்றனர்.ஊரடங்கு காரணமாக திண்டுக்கல், நிலக்கோட்டை, ஒட்டன் சத்திரம், மதுரை விருதுநகர் மாவட்டங்களுக்கும் அண்டை மாநிலமான கேரளாவுக்கு ரோஜா பூக்களையும், செடிகளையும் விற்பனைக்கு அனுப்பமுடியவில்லை. இதனால் ரோஜா விவசாயிகள் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறியுள்ளது, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் இவர்களது நலனில் அக்கறை காட்ட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.