சென்னை, ஜூலை 27 - கந்த சஷ்டி கவசத்தை விமர்சித்து வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது நடவடிக்கை கோரி இந்து மதவெறி அமைப்புகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தன. அதனடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மற்றும் அதன் வெளியீட்டாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது 5 பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக வேளச்சேரியை சேர்ந்த செந்தில்வாசன் (49) என்பவரை கைது செய்தனர். இந்த நிலையில், நிகழ்ச்சி தொகுப்பாளர் சுரேந்திரன் புதுச்சேரி அரியங்குப்பம் காவல்நிலையத்தில் சரணடைந்தார். இவர்கள் இருவரையும் ஜூலை 30ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் சுரேந்திரன் மீது குண்டர் போடப்பட்டுள்ளது. மேலும், நபிகள் நாயகம் குறித்து ஆபாசமாக பேசிய கோபால் என்பவர் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனல் அவர்கள் இருவரும் ஒரு வருடம் ஜாமீன் பெற முடியாது.
(ந.நி.)