கீழடி 6ஆம் கட்ட அகழாய்வுப் பணியில் பெரிய விலங்கின் எழும்புகள் கண்டுபிடிக்கபட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிவடைந்து ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி தொடங்கியது. ஆறாம் கட்ட அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பணிகள் நடந்து வந்தன. கொரானோ வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி அகழாய்வு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
மே 22 ஆம் தேதி முதல் மீண்டும்பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வரும் நிலையில், கீழடியில் ஒரு குழி தோண்டும்போது பெரிய விலங்கின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. சுமார் 3 மீட்டர் அளவில் இருக்கும் இந்த எழும்புகளை கண்டறிந்த தொல்லியல்துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஏற்கனவே 5ஆம் கட்ட அகழாய்வின்போது பண்டைய தமிழர்களின் வேளான்மைத் தொழில் நுட்பம், நெசவு, கால்நடை வளர்ப்பு, நீர் மேலான்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஆதாரத்துடன் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. ஆறாம் கட்ட அகழாய்வில் கொந்தகை பகுதியில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டதும் மணலூரில் சுடுமண்ணால் ஆன உலை கண்டிபிடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.