tamilnadu

img

வாசிப்பதும் களப் போராட்டங்களில் இணைப்பதும் முதன்மையானது

கம்யூனிஸ்ட் அறிக்கை வாசிப்பு இயக்கத்தில் டி.கே.ரங்கராஜன் பேச்சு

சென்னை, பிப்.22-  கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை பல் வேறு தலைவர்களும் வாசித்திருக்கி றார்கள். அதனை வாசிப்பதோடு, களத்தி லும் செயல்படுத்திப் பார்த்து கற்பதுதான் ஒரு கம்யூனிஸ்ட் முன் உள்ள கடமை யாகும் என்று டி.கே.ரங்கராஜன் எம்.பி. பேசினார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்தில் சிவப்பு புத்தக தின, கம்யூனிஸ்ட் அறிக்கை வாசிப்பு நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வீ.பா.கணேசன் தலைமையேற்றார். கே.சரவணன் வரவேற்புரையாற்றினார். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தமிழில் மொழியாக்கம் செய்த மு.சிவலிங்கத் திற்கு அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன் பாராட்டு தெரி வித்து பேசினார். ஒலி வடிவில் புத்தக மாக்கிய இயல் குழுவின் சார்பில் அருந் தமிழ் யாழினி நினைவுப் பரிசு பெற்றார். 

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஆறுமுக நயினார் தொடக்க வுரையாற்றினார். அவரைத் தொடர்ந்து வில்சன், விஜயலட்சுமி மற்றும் வெங்க டேசன் ஆகியோர் கம்யூனிஸ்ட் அறிக்கை யின் முதல் அத்தியாயத்தை வாசிக்க, மற்றவர்கள் கவனித்துக் கேட்டார்கள்.  இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., பேசியதாவது:

“உலகம் முழுவதும் வலதுசாரி அர சியல் அலை அடிக்கிறது. அது ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக வடிவம் எடுக்கிறது. இந்தியாவில் மத்திய ஆட்சி மட்டுமல்ல, உச்ச நீதிமன்ற தீர்ப்பும் கூட பல்வேறு சாதிய பிளவுகளை விசிறி விடும் வகையில் அமைந்துள்ளது.  இப்படியான சூழலில், ஆளும் வர்க்கத்திற்கு எதிரான தளபதிகளாக கம்யூனிஸ்ட்டுகள் செயல்பட வேண்டும். நாமெல்லாம் ராணுவ தளபதிகள் என் றால், மக்கள்தான் படையணிகள். தளப திகளாகிய நாம் மக்களை தயார்ப்படுத்த வேண்டும். அதற்கு மார்க்சியத்தை படிப்பது மிக முக்கியம். கம்யூனிஸ்ட் அறிக்கை வாசிப்பு அதற்கு உதவும். ஆனால் வாசிப்பதால் மட்டுமே ஒருவர் கம்யூனிஸ்ட்டாக ஆகிவிட முடியாது. மகாத்மா காந்தியும், ராஜாஜியும் கம்யூ னிஸ்ட் அறிக்கையை படித்தவர்கள். ராஜாஜி அபேதவாதம் என்ற புத்தகத்தை கூட எழுதி வெளியிட்டார். ஆனால் பிறகு நான் அதை கைவிட்டுவிட்டேன் என அறிவித்துவிட்டார். கலைஞர் கருணாநிதி யும், காமராஜரும் அறிக்கையை படித் தார்கள். 

களத்தில் செயல்படுத்துவதன் மூலம் தான் நாம் மார்க்சிஸ்டுகளாக ஆக முடியும். அரசு இயந்திரம் என்பதன் பலத்தை  புரிந்துகொள்ள களப் போராட்டங்கள் தான் நமக்கு கற்பிக்கும். போராட்டங்க ளால்தான் நமக்கான கல்வியை பெற முடியும். மத, சாதிய வேற்றுமைகளை யெல்லாம் களைந்து நம்மை வர்க்க ஒற்று மையின் பால் ஈர்க்கக் கூடியது போராட்டக் களம்தான். கம்யூனிஸ்ட் அறிக்கை வாசிப்பது மிகச் சிறப்பான தொடக்கம். இன்றைய சூழலுடன் சேர்த்து கற்க இந்த வாசிப்பு நமக்கு உதவுகிறது. எனவே, வாசிக்காத இடங்களிலும் நாம் வாசிப்பு இயக்கத்தை பரவலாக்கிட வேண்டும். இவ்வாறு டி.கே.ரங்கராஜன் கூறி னார்.