அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி கொண்ட இந்தியாவை அமைக்க கனவு கண்டவர் காந்தி. மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை கனவு கண்டவர் நேரு. இவற்றின் உள்ளடக்கமாக கொண்ட அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர் அம்பேத்கர். ஆனால் இந்தப் பண்புகள் அனைத்தும் ஒவ்வொன்றாக பறிக்கப்படுகின்றன. பாஜக ஆட்சியில் கொண்டு வரப்படும் சட்டங்கள், திட்டங்கள், நீதிமன்ற தீர்ப்புகள் போன்றவை இந்துத்துவா பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இவற்றால் பாதிக்கப்படுகிறவர்கள் யார்? ஒவ்வொருவரும் தங்களது அரசியல் நிலைபாடு என்ன என்பதை உறுதியாக தெரிவிக்க வேண்டிய நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது.