சென்னை,டிச.17- தேர்தல் பயிற்சியில் கலந்து கொள்ளாத ஆசிரி யர்கள், அரசு ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்குச்சா வடி தலைமை அலுவலர்களாகவும், அலுவலர்க ளாகவும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்க ளுக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பயிற்சியில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது. இதையடுத்து பயிற்சியில் பங்கேற்காத ஆசிரி யர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் விளக்க மளிக்கும்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நோட் டீஸ் அனுப்பியுள்ளனர். அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்இன்று நடைபெறும் பயிற்சியில் பங்கேற்க வேண்டுமெனவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.