முக ஸ்டாலின், கி.வீரமணி கண்டனம்
சென்னை,அக் 6- இந்திய ஜனநாயகத்தை காப்பாற்றிட 49 பேருக்கு எதிரான தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலை வரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சிறுபான்மையினருக்கு எதிரான கும்பல் வன்முறையைத் தடுத்து நிறுத்துங்கள், மத நல்லிணக்கத்தையும், சகிப்புத்த ன்மையையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுங்கள் என்று பிரதமருக்கு கடிதம் எழுதிய, புகழ்வாய்ந்த பல்துறை பிர முகர்கள் 49 பேர் மீது தேசத்து ரோக வழக்குப்பதிவு செய்திருப்பதற்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரி வித்துக் கொள்கிறேன். வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா, இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி, இயக்குனர் அடூர் கோபால கிருஷ்ணன் போன்ற கலை - அறிவுலகச் சான்றோர்களை தேசத் துரோகிகள் என்று முத்திரை குத்த நினைப்பதை எவராலும் ஏற்றுக்கொள்ள இயலாது.
சமூக அக்கறை உள்ள அத்தகைய முன்னோடிகளை தேசத்துரோகிகள் என்று சொல்வதைவிடப் பேரபாயம் வேறு எதுவும் இருக்க முடி யாது; சர்வாதிகாரத்தை கையில் எடுத்தவர்கள், அடக்கு முறையைக் கட்டவிழ்த்து விட்ட வர்கள், கருத்துச் சுதந்திரத்திற்கு கைவிலங்கு போட்டவர்கள் எல்லாம் ஜனநாயகத்தின் முன்பு இதுவரை படுதோல்வி அடைந்ததுதான் வரலாறு என்பதை, மத்தியில் இருக்கும் பா.ஜ.க. அரசு உணர வேண்டும். எனவே மத்தியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி அரசு, 49 பேருக்கு எதிரான தேசத்துரோக வழக்கினை உடனடியாகத் திரும்பப் பெறுவ தற்கான நடவடிக்கைகளை எடுத்து, இந்திய ஜனநாய கத்தையும், அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளையும் காப்பாற்றிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கி.வீரமணி
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 49 பெரு மக்கள் மத்திய ஆட்சியின் தவறான போக்குகளை சுட்டிக் காட்டி பிரதமருக்கு கடிதம் எழுதிய காரணத்தால் அந்த 49 பேர்மீதும் தொடுக்கப்பட்டுள்ள தேசத் துரோக வழக்கினை பிரதமர் தலையிட்டு வாபஸ் வாங்கச் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. மாற்றுக் கருத்துக்கு இட மில்லா விட்டால் அது ஜனநாயக நாடாக இருக்க முடியாது. எதேச்சதிகாரக் காடாக மாறு வது தவிர்க்கப்பட முடியாத ஒன்றே. பிஜேபி ஆட்சியில் தன்னாட்சி உரிமை கொண்ட நிறுவனங்கள் அனைத்தும் நீர்த்துப் போகச் செய்யப்பட்டு ள்ளன என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றே இந்தப் பிரச்சினை உலக நாடுகள் மத்தியிலும், இந்தியாவின் மதிப்பை மிகவும் கீழே தள்ளி விடும் என்றும் வீரமணி அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜய காந்த் விடுத்துள்ள அறிக்கை யில், தேச துரோக வழக்கு என்பது தேசத்திற்கு எதிராக மாறுபட்ட கருத்தோடு, கருத்துக்களை பதிவு செய்வதும் வன்முறையில் ஈடுபடுவதும் தான் ஒரு குற்றமாக இருக்க முடியும். தங்களது கருத்து க்களை பகிர்ந்து கொள்வ தற்கு கடிதம் எழுதுவதே தேசிய குற்றமாக ஏற்றுக்கொள்ள ப்படுவது சரியானது அல்ல. எனவே இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உட்பட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்குகளை உடனடியாக திரும்ப பெற்று, தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பகிர்கின்ற ஒரு உரிமையை அனைவருக்கும் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.