சென்னை,அக். 6 வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள காற்றின் திசை மாறுபாடு காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி முதல் கோவா வரை வளிமண்டத்தில் ஏற்பட்டுள்ள காற்றின் திசை மாறுபாடு காரணமாக வடக்கு உள்தமிழக மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.