tamilnadu

img

சில்லரை பால் விற்பனைக்கு தடை நீக்கம்: பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வரவேற்பு

சென்னை,அக்.23- பிரதம பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் சில்லரை பால் விற்பனைக்கு தமிழக அரசு விதித்த தடை ரத்து செய்யப்பட்டதை தமிழ்நாடு  பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வரவேற்றுள் ளது.  இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.முகமதுஅலி வெளியிட்டிருக்கும் அறிக்கை யில்,“இம் மாதம் 17 ஆம் தேதி தமிழக அரசின்  பால்வளத்துறையின் சார்பாக பிரதம பால் உற்  பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பொது மக்களுக்கு சில்லரை பால் விற்பனை செய்யக்  கூடாது. கொள்முதல் செய்கிற பால் முழுவதை யும் சத்துக்கள் குறையாமல் ஆவினுக்கே வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதுவரை, நடைமுறையில் பல பிரதம சங்கங்களின் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள், குழந்தைகளுக்கு பால்  வழங்குவது என்ற அடிப்படையில், சில்லரை யில் ஒரு பகுதி பாலை விற்று வந்தனர். கொள் முதல் விலையை விட 1 லிட்டருக்கு ரூ.2, ரூ.3 கூடுதலாக விலை நிர்ணயித்து விற்று வந்தனர். இதனால், பொது மக்களுக்கு தரமான புதிய  பால் கிடைத்து வருகிறது. அரசின் உத்தரவால் பால் உற்பத்தியாளர்களும், பிரதம சங்கப்பணி யாளர்களும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்த னர். அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்  என வலியுறுத்தி நவம்பர் மாதத்தில் போராட்டம்  நடத்த தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம்  அறிவித்திருந்தது.

இந்நிலையில், பால் உற்பத்தியாளர்கள் தரப்பிலுள்ள நியாயங்களில் பரிசீலித்த அரசு அதிகாரிகள், சில்லரை பால் விற்பனைக்கு விதித்திருந்த தடையை 21.10.2019 அன்று ரத்து  செய்து உத்தரவிட்டிருக்கிறார்கள். இதை வரவேற்கிறோம். சங்கத்தின் தலைவர் ஏ.எம்.முனுசாமி, பொதுச் செயலாளர் கே.முகமதுஅலி இருவரும் அக்.22 அன்று பால் உற்பத்தியாளர்கள் சங்கங்  களின் மாநில இணையத்தின் நிர்வாக இயக்குன ரும், ஆவின் ஆணையருமாகிய காமராஜ் அவர்  களை சந்தித்தோம். அப்போது, பிரதம சங்கங்களில் பாலை வண்டிகளில் ஏற்றும் போதே பாலில் உள்ள  சத்துக்களையும் அளவையும் குறித்துக் கொடுக்க வேண்டும். அனைத்து மாநிலங்களி லும் நடைமுறையில் உள்ளதைப் போல பாலில்  உள்ள சத்துக்களை கண்டறிய ஐ.எஸ்.ஐ. விதி முறையையே பயன்படுத்த வேண்டும் என  கோரிக்கை விடுத்தோம். இதையும் ஏற்றுக் கொள்வதாகவும், விரைவில் அறிவிப்பதாகவும் ஆணையர் உறுதியளித்தார்.

தற்போது, பல மாவட்டங்களில் பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கு ஆவின் நிர்வாகம் 7 வாரங்கள் வரை பால் பணம் பாக்கி  வைத்துள்ளது. இதற்கு இந்த ஒன்றியங்களுக்கு முதலில் பணம் கொடுத்து பாக்கிகளை வழங்கி  விடுவதாக ஆவின் ஆணையர் அவர்கள் உறுதி யளித்தார். இந்த வகையில் சுமார் ரூ.200 கோடி  வரை பாக்கி உள்ளது. தமிழக அரசின் சார்பாக, மத்திய அரசிற்கு  4.11.2019 அன்று உலக நாடுகளுடன் இந்திய அரசு செய்யவிருக்கிற ஒப்பந்தத்தில் ஆவின்  பால் பொருள்கள் உட்பட இந்திய வேளாண்  உற்பத்தி பொருட்கள் பாதிக்காத வகையில்  உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி யிருப்பதாகவும் ஆவின் ஆணையர் தெரி வித்தார்.