tamilnadu

img

பெரம்பலூர் மாணவி கீர்த்தனாவுக்கு சிபிஎம் அஞ்சலி

பெரம்பலூர் தீரன் நகரில், நீட் தேர்வில் 384 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தும் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில் மனமுடைந்த மாணவி கீர்த்தனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலுக்கு அப்பகுதி மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.செல்லதுரை, மக்களுக்கான மருத்துவக் கழக செயலாளர் டாக்டர் சி. கருணாகரன், தமுஎகச மாவட்டச் செயலாளர் பேரா.ப.செல்வகுமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.