tamilnadu

img

தேர்தல் கணக்குகள் தொடர்பான அவதூறுகளுக்கு சிபிஎம் மறுப்பு

சென்னை,செப்.27-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பதினேழாவது  நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் முழுவதும் கட்சி அணிகளிடமிருந்தும், மக்களிட மிருந்தும், ஆதரவாளர்களிடமிருந்தும் நிதி திரட்டியது. அதுபோல் நாடாளு மன்றத் தேர்தலின் போது தோழமைக் கட்சியான திமுகவும் நிதி வழங்கியது. இந்த நிதியினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தோழமைக் கட்சிகள் மூலமாக தேர்தல் பணிகளுக்காக செலவழிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வரவு மற்றும் செலவினங்கள் தொடர்பான அனைத்து விபரங்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கட்சியின் அகில இந்திய மையத்திற்கு கொடுக்கப்பட்டு, தேர்தல் ஆணையத்திற்கும் ஒளிவுமறைவின்றி மத்தியக்குழுவின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு விடுத்துள்ள அறிக்கையின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்நிலையில் தேர்தல் வரவு-செலவு தொடர்பாக சில பத்திரிகைகளும், ஊடகங்களும், அரசியல் எதிரிகளும் வேண்டுமென்றே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், குறுகிய அரசியல் - ஆதாய நோக்குடனும் பல்வேறு அவதூறுகளை அள்ளி வீசி வரு கின்றனர்.

இவை அனைத்தும் உண்மை நிலைக்கு முற்றிலும் புறம்பான தாகும். தேர்தல் நிதி வரவு மற்றும் செலவினம் தொடர்பாக அனைத்து விபரங்களும் தேர்தல் ஆணையம் வெளியிடும் போது அனைவருக்கும் தெரியவரும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது. மேலும், இத்தகைய அவதூறுகள் பரப்புவதன் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது களங்கம் கற்பிப்பதை ஒருபோதும் மக்கள் ஏற்கமாட்டார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.