பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 லட்சத்தை தொடுகிறது
வாஷிங்டன், ஏப்.26- உலக வரலாற்றில் இல்லாத விதத்தில் கோவிட் 19 தொற்று நோயால் உலகம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா அதிகபட்ச மரணங்களை சந்தித்து பெரும் பாதிப்பிலும், திற ணலிலும் சிக்கியுள்ளது. அங்கு சனிக்கிழமை மாலை நிலவரப்படி 54 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் பலியாகியுள்ளனர்.
கொரோனா பாதிப்பால் அநேகமாக உலகின் அனைத்து நாடுகளிலும் தடுப்பு நடவடிக்கைகள் அமலில் இருக்கின்றன. உலகம் முழுவதும் ஊர டங்கு நடைமுறையில் இருக்கிறது. பாதிப்பின் ஏற்ற இறக்கத்தை பொறுத்து, ஊரடங்கில் தளர்வு கொண்டு வர அரசுகள் முயற்சி மேற்கொண்டுள் ளன. கொரோனா பாதிப்போடு, அனைத்து நாடுகளி லும் - சோசலிச சீனா, கியூபா, வியட்நாம் போன்ற சில நாடுகளை தவிர - தொழிலாளர் வர்க்கம், குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்களும் விளிம்பு நிலையில் உள்ள கோடானகோடி மக்களும் ஆளும் அரசுகளால் கவனிக்கப்படாதவர்களாக, நோய் பிடி யிலும், வறுமையின் பிடியிலும் சிக்கியுள்ளனர்.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பு எண் ணிக்கை 30 லட்சத்தை நெருங்கியுள்ளது. ஏப்ரல் 26 மாலை 6 மணி நிலவரப்படி உலகம் முழு வதும் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 லட்சத்து 38 ஆயிரத்து 308 பதிவாகியுள்ளது. பலி யானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 3 ஆயிரத்து 797 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 8 லட் சத்து 41 ஆயிரத்து 515 ஆகவும் அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் வரிசை கிரமமாக அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், துருக்கி, ஈரான், சீனா, ரஷ்யா, பிரேசில், பெல்ஜியம், கனடா, நெதர் லாந்து, ஸ்விட்சர்லாந்து என நாடுகளின் பெயர்கள் நீள்கின்றன. ஸ்விட்சர்லாந்தை தொடர்ந்து 16 ஆவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்தியா வில் கொரோனா பாதிப்பு கால் லட்சத்தை தாண்டி 26 ஆயிரத்து 496 என்ற நிலையை எட்டியுள்ளது.
முதலில் பாதிக்கப்பட்ட சீனா படிப்படியாக முன் னேறி பலியானோர் எண்ணிக்கை 4,632 என்பதை இறுதி செய்து, கடந்த ஒரு வாரகாலமாக புதிதாக ஒரு மரணம் கூட பதிவாகவில்லை என்ற கட்டத்தை எட்டியிருக்கிறது. எனினும் அங்கு ஒவ்வொரு நாளும் பத்து பேர் முதல் இருபது பேர் வரை பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டு, தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார் கள். சீனாவில் பாதிப்பு ஏற்பட்ட சமயம் முதலே தீவிர தடுப்பு நடவடிக்கைகளையும், சிகிச்சைகளை யும் மேற்கொண்ட தென்கொரியா நல்ல முன் னேற்றத்தை எட்டி பாதிப்பு எண்ணிக்கை வெறும் 10,728; பலி 242 என்ற அளவில் கட்டுப்படுத்தி யுள்ளது. அதேபோல சிங்கப்பூரில் பாதிப்பு 13,624 என்ற நிலைக்கு சென்ற போதிலும் பலி எண்ணிக்கை வெறும் 12 என்ற நிலையிலேயே தடுத்து நிறுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் பாதிப்பு என்ற போதிலும், பிர தானமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடு களே மிக கடுமையான துன்பத்திற்கு உள்ளாகி யுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனி மட்டும், பாதிப்பு எண்ணிக்கை 1,56,513 என்ற நிலைக்கு சென்ற போதிலும் பலி எண்ணிக்கையை கட்டுப் படுத்துவதில் முனைப்பாக இருக்கிறது. ஸ்பெயி னில் 22,902 பேர், இத்தாலியில் 26,384 பேர், பிரான்சில் 22,614 பேர், பிரிட்டனில் 20,319 பேர் என கடுமையான எண்ணிக்கை எட்டிய போதிலும் ஜெர்மனி பலி எண்ணிக்கை 5,877 என்ற அளவில் கட்டுப்படுத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.
உலக நாடுகளில் அலட்சியத்தின் உச்சம், எதி லும் லாபவெறி, கொள்ளை நோய் பரவும் காலத்தி லும் கூட ஏகாதிபத்திய வேட்கை என வெறி கொண்டு அலைவதன் விளைவை அமெரிக்கா சந்தித்து வருகிறது. அங்கு உலகிலேயே உச்சகட்ட மாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட வர்களின் எண்ணிக்கை 9,60,896 ஆக அதிக ரித்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 50 ஆயி ரத்தை தாண்டி, 54,265 ஆக பதிவாகியுள்ளது.