tamilnadu

img

முதலமைச்சரின் பொதுநிவாரணம்: காளீஸ்வரி நிறுவனம் ரூ.25 லட்சம்

சென்னை, ஏப்.4- கோவிட்-19 என்று அழைக்கப்படும் கரோனா வைரஸ் தொற்று தமிழ்நாட்டில் வேகமாக பரவுகின்ற அச்சுறுத்தலான சூழல் நிலவுகின்ற நிலையில், மாநிலத்தில் இத்தொற்றுப் பரவலுக்கு எதிரான அரசின் செயல் நடவடிக்கைகளுக்கு உதவ,காளீஸ்வரி ரீஃபைனரி நிறுவனம் அதன் பங்களிப்பை வழங்குவதை அறிவித்திருக்கிறது.

 ரூ.25 லட்சத்தை தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரணநிதிக்கு வழங்கியுள்ளது.   லட்சக்கணக்கான மக்களை பாதிக்கக்கூடிய இத்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தவும் மற்றும் தொற்று பரவியவர்களுக்கு சிகிச்சையளிக்கவும் அரசுக்கு இருக்கின்ற மிகப்பெரிய சவால் மற்றும் பணியைக் கருத்தில் கொண்டு  இதற்கானபணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர் ஊடகத்தினர் மற்றும் தன்னார்வ பணியாளர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும்அந் நிறுவனம் கூறியுள்ளது.