tamilnadu

img

ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்வதா?

மார்க்சிஸ்ட் கட்சி  எம்.பி.க்கள் எதிர்ப்பு

கோயம்புத்தூர், ஏப்.7- ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய் வதா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக கட்சியின் மக்களவைக் குழு தலைவரும், கோவை நாடாளுமன்ற உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன் விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய அமைச்சரவையின் முடிவாக நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டு நிதி இரண்டு ஆண்டுகள் ரத்து செய் யப்படும் என்பது ஏற்பதற்கில்லை. நாடா ளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஏழை, எளிய மக்கள் வாழுகின்ற பகுதியான அரசின் உத விகள் இதுவரை பெறாத கிராமப்புற பகுதி களுக்கு  இந்த நிதி பலவகையில் பயன்படுத் தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் ஆண்டு ஒன்றிற்கு சுமார் 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு மக்களுக்கு பயன் படுத்தப்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டு கள் என்கிற போது மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய மிகப்பெரும் நிதியை மத்திய அரசு தன்னை நோக்கி திருப்பிக்கொள்வ தாக கருத வேண்டியுள்ளது. 

மேலும், கொரோனாவிற்கான நிதி ஒதுக்கீட்டை பார்க்கின்றபோது இதிலேயே அரசியல் வேறுபாடு கள் உள்ளது இப்போதே தெளிவாக தெரியும்.  இந்த நிலையில் இந்த தொகுதி நிதி என்பது மத்திய அர சின் தொகுப்பில் இணைக்கப்பட்டு செலவு செய்யப் படுமேயானால் எந்த மாநிலத்திற்கு இதனை செலவு செய்கிறார்கள் என்ற விபரங்கள் நமக்கு தெரியாது. வாக்களித்த மக்களுக்கு குறைந்தபட்ச நன்மைகளை செய்வதற்கான இந்த நிதியையும் பறிப்பது சரியான நடவடிக்கையில்லை. 

இந்நிலையில் கடந்த 24 ஆம்தேதி 25 ஆயிரம் கோடி ரூபாயில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கும், ராஜபாதையை உருவாக்குவதற்கும் மோடி அர சாங்கம் அங்கீகாரம் அளித்துள்ளது. அவசர நிலை யை கருத்தில் கொண்டு அந்த நிதியை கொரோனா தடுப்பு நிதியாக பயன்படுத்தலாம் என தீர்மானிக்கா மல் பாரதிய ஜனதா கட்சி அரசு மக்கள் மீது குறைந்த பட்சம் இரக்கம் கூட காட்டாமல் நடந்துகொள்வது என்பது ஏற்புடையதன்று. இதனை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தேவை அதிகாரப் பரவல்; அதிகார குவிப்பு அல்ல!

மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் விடுத்துள்ள அறிக்கை:-  இரண்டு ஆண்டுகளுக்கு நாடாளுமன்ற உறுப்பி னரின் உள்ளூர்  தொகுதி மேம்பாட்டு நிதி இருக்காது என்று மத்திய அரசு அறிவித்திருப்பது, கொரோனா ஒழிப்பு தேவைகளுக்காக எடுக்கப்பட்ட முடி வாகத் தெரியவில்லை. இவர்களின் தவறான பொரு ளாதாரப் பாதையால் ஏற்கனவே சீர் குலைந்துள்ள நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பதற்கே. 

அரசு, கொரோனா ஒழிப்பிற்கு செலவிட வேண்டு மென்றால் வருவாயை எங்கிருந்து திரட்டவேண்டும்? ஒரு சதவீதம் கார்ப்பரேட் வரிகளை உயர்த்தினாலே குறைந்த பட்சம் 50,000 கோடி ரூபாய் கிடைக்கும். கடந்தாண்டு வழங்கிய கார்ப்பரேட் வரிச் சலுகை களை தேசத்தின் நலனுக்காக திரும்பப் பெற்றால் ரூ.1,50,000 கோடி கிடைக்கும். ஆனால் அதற்கான அரசியல் உறுதியற்ற மத்திய அரசு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கைவைப்பது கொரோனா ஒழிப்பிற்கு உத வாது. உள்ளூர்  மக்களின் தேவையை, சேவையை இது பாதிக்கும். எனவே மத்திய அரசு இந்த முடிவை மறு பரிசீலனை செய்யவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.